twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப் விருது ரஹ்மானுக்கு சட்டசபையில் பாராட்டு

    By Staff
    |

    AR Rahman
    சென்னை: கோல்டன் குளோப் விருது பெற்றமைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழக சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ரஹ்மானைப் பாராட்டி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், தமிழ், இந்தி போன்ற பல்வேறு இந்தியப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஸ்லம்டாக் மில்லியினர் என்ற ஆங்கிலப் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலகப் புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்காகவும், இந்திய திரைப்பட இசையின் புதிய அனுபவம் என்கிற மதிப்பீட்டின் அடிப்படையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதற்காகவும், தமிழகத்தின் பெருமையையும், புகழையும் உலகத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லும் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இந்த அவையின் ஏகோபித்த பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதுபோல், பத்ம பூஷன் விருது பெற்ற ஜெயகாந்தன், வி.கணபதி ஸ்தபதி, வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்திரி, சரோஜினி வரதப்பன் ஆகியோருக்கும், பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், நடிகர் விவேக், அருணா சாய்ராம், டாக்டர் சுப்பிரமணிய கிருஷ்ணசாமி, டாக்டர் தணிகாசலம் சடகோபன், பி.ஆர்.கிருஷ்ணகுமார், டாக்டர் ஆர்.சிவராமன், டாக்டர் ஷேக் காதர்நூரூதின், ஆறுமுகம் சக்திவேல் ஆகியோருக்கும் அவையின் ஏகோபித்த பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X