For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'கூடையில கருவாடு, கொண்டையில பூக்காடு' ஒரு தலை ராகத்துக்கு 40 வயசு! டி.ஆரின் ஆரவாரமில்லா அதிசயம்!

  By
  |

  சென்னை: 'ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது என்று. 'ஒரு தலை ராகம்' படத்தை திருநெல்வேலி ராயல் தியேட்டரில் நேற்று பார்த்தது போல்தான் இருக்கிறது. அதற்குள் 40 வருடம் ஆகிவிட்டது' என்று ஆச்சரியப்பட்டார் இயக்குனர் ஒருவர்.

  காதலாலும் சோகத்தாலும் ஏக்கத்தாலும் பாடல்களாலும் ரசிகர்களைத் தித்திக்க வைத்த படங்கள் பல.

  அதில் தவிர்க்க முடியாத படமாக இருக்கிறது, 'ஒரு தலைராகம்'. ஒரு சிறந்த கலைஞனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படமும் கூட.

  நார்னியா தேசத்து ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க.. பிரபல நடிகையின் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்!

  சிறு நகர கல்லூரி

  சிறு நகர கல்லூரி

  அந்தப் படத்துக்கு இன்று 40 வயது! 1980 ஆம் ஆண்டு இதே மே இரண்டாம் தேதிதான் வெளியானது, இந்த காதல் ராகம்! செட்டுக்குள் இருந்த சினிமாவை பாரதிராஜா வெளியே இழுத்து வந்து, சில வருடங்கள்தான் ஆகியிருக்கும் அப்போது. அடுத்ததாக, ஒரு சிறு நகரத்தின் கல்லூரியை சினிமாவுக்குள் அப்படியே கொண்டு வந்தது, இந்தப் படம்தான்!

  அடையாளங்கள்

  அடையாளங்கள்

  அப்போதைய பள்ளி இறுதி மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் படம் தந்த பாதிப்பு, கொஞ்ச நஞ்சமல்ல. இதன் நாயகனைப் போலவும் நாயகியை போலவும் காதலைச் சொல்லவும் சொல்ல முடியாமலும் தவிக்கிற பலரின் அடையாளங்களாக இருந்தனர், இந்தப் படத்தின் ஹீரோ சங்கரும் ஹீரோயின் ரூபாவும். அதனால்தான் அந்த கேரக்டர்களோடு ஒன்றினார்கள் ரசிகர்கள்.

  கூட்டம் வரவில்லை

  கூட்டம் வரவில்லை

  இந்தப் படத்துக்குப் பிறகுதான், ஹீரோவுக்கு நான்கைந்து நண்பர்கள் வேண்டும் என்கிற பார்முலா சினிமாவுக்கு வந்தது என்கிறார்கள். படம் வெளியாகி முதல் பத்து நாட்கள் அதிக வசூலில்லை. வேறு வழியில்லாமல், ஒரு கட்டத்தில் தியேட்டரை விட்டு படத்தைத் தூக்க வேண்டிய நிலை வந்தது. அப்போதுதான் விமர்சனங்கள் வழியாக, திடீரென வழியத் தொடங்கியது கூட்டம்.

  வசூல் சாதனை

  வசூல் சாதனை

  பிறகு 175 நாட்களைக் கடந்து ஓடி, வசூலில் சாதனை படைத்ததெல்லாம் முன் வரலாறு. படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை என எல்லாமே டி.ராஜேந்தர்தான். அதுவே அப்போது வியந்துபோன விஷயம். ஒருத்தர்ட்ட எப்படிங்க இவ்ளோ திறமை? என்று வாய்பிளந்தார்கள். இதற்காக அந்த காலகட்டத்தில் அவரை புகழாதவர்கள் இல்லை.

  காதல் திருமணம்

  காதல் திருமணம்

  படத்தில், இயக்கம் இப்ராஹிம் என பெயர் இருந்தாலும் ராஜேந்தர்தான் இயக்கி இருப்பார் என்றே அப்போதிருந்தே பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடித்த உஷாவைதான் டி.ராஜேந்தர் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு இப்போதுவரை இருக்கிறது, தனி ரசிகர் கூட்டம்.

  கூடையில கருவாடு

  கூடையில கருவாடு

  அப்போதைய புள்ளிக்கோங்ஸ், இதன் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடமாக வைத்திருந்தார்கள். என் கதை முடியும் நேரமிது, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே, நானொரு ராசியில்லா ராஜா என நிறைய காதல் சோகம். கூடவே, வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது, அந்த மன்மதன் ரட்சிக்கணும், கூடையில கருவாடு என ஜாலி கேலி பாடல்களும் உண்டு.

  மூழ்காத நினைவு

  மூழ்காத நினைவு

  இதைப் பாடல்களுக்காக ஓடிய படம் என்று கூட சொல்வார்கள். காதலனும் காதலியும் தொடாமல், பார்வையால் காதலித்த முதல் படம் இதுதான். சில படங்களை, நினைத்தாலே இனிக்கும். இந்தப்படமும் அப்படித்தான். இதன் டைட்டிலை கேட்டாலே, பலர், தங்கள் முன்னாள் காதலின் மூழ்காத நினைவுக்குள் வாழத் தொடங்கிவிடுவார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? அப்படியொரு அதிசயத்தை ஆரவாரமில்லாமல் செய்வது சினிமாதான். அந்த சக்தி, ஒரு தலை ராகத்துக்கு அதிகமாகவே உண்டு!

  English summary
  40 years of T. Rajendar's 'Oru Thalai Raagam'
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X