»   »  ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra

ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபூர்வ ராகங்கள் வெளியாகி சரியாக 42 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படத்தில் அவரது அறிமுகக் காட்சிக்கு பாலச்சந்தர் வைத்திருந்த பெயர் சுருதிபேதம்.

ஆனால் அவரது திரைப் பயணம் சுருதிபேதமாக இருக்கவில்லை. மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும் என அர்த்தமுள்ள படங்கள், அழுத்தமான பாத்திரங்களாக ஆரோகணத்தில் அமைந்தது.

பாக்ஸ் ஆபீஸ் நாயகன்

பாக்ஸ் ஆபீஸ் நாயகன்

நடிக்க ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டவர் ரஜினி. பில்லா படம் வெளியானதிலிருந்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியானார். முதல் படத்திலிருந்து, கடைசியாக வெளியான கபாலி வரை ரஜினிக்கு ஏறுமுகம்தான். நடுநடுவில் ஓரிரு படங்கள் தோல்வியடைந்தாலும், அவரது பாக்ஸ் ஆபீஸ் அந்தஸ்து சரிந்ததில்லை.

வேடங்களில் வெரைட்டி

வேடங்களில் வெரைட்டி

எந்த வேடம் ஏற்றாலும் அந்த வேடமாகவே மாறுவதில் ரஜினிக்கு நிகர் இல்லை. அவரை திரையில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு வரும் உற்சாகமே தனி. அதுதான் அவருக்கென ஒரு அன்பு சாம்ராஜ்யத்தை ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறது.

நிஜமான ஆக்ஷன் கிங்

நிஜமான ஆக்ஷன் கிங்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் வேடங்களில் முத்திரைப் பதித்தவர் அமரர் எம்ஜிஆர் என்றால், அதில் வித்தியாசம் காட்டி மக்கள் உள்ளங்களைக் கொள்ளையடித்தவர் ரஜினிகாந்த். முதல் முறையாக சண்டைக் காட்சிகளுக்காக மக்கள் திரையரங்குகளை நாடி ஓடியது ரஜினி படங்களுக்குத்தான். சண்டையில் இவரது ஸ்டைல் தனி அழகு.

இன்றும் பிஸினஸில் நம்பர் ஒன்

இன்றும் பிஸினஸில் நம்பர் ஒன்

ரஜினி என்பவர் இன்றைக்கு இந்திய சினிமாவின் உலக அடையாளம். அவர் படங்களின் வர்த்தகம் உலக அளவில் உள்ளது. சம்பளம் ரூ 100 கோடிகளைத் தாண்டிவிட்டது. அவரது ஒரு படத்தின் குறைந்தபட்ச வர்த்தகம் ரூ 200 கோடியாகிவிட்டது.

2.ஓ

2.ஓ

ரஜினிக்கு இப்போது வயது 67. இந்த வயதில் இந்திய சினிமாவில் அதிக முதலீட்டுடன் எடுக்கப்படும் படம் ஒரு ரஜினி படம்தான். அது 2.ஓ. ரூ 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் டிவி உரிமை, தெலுங்கு உரிமை வியாபாரம் மட்டுமே ரூ 250 கோடியைத் தாண்டியுள்ளது. உலக உரிமை, திரையரங்க உரிமையெல்லாம் சேர்த்தால் இதன் வர்த்தகம் வாயைப் பிளக்க வைக்கும்.

42 ஆண்டுகள்

42 ஆண்டுகள்

தமிழ் சினிமாவில் பொன் விழா கொண்டாடிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஸ்டாராகவே 42 ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் ரஜினி மட்டும்தான். இந்த 42வது ஆண்டை #42YearsOfRajiniEra என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

English summary
2017 -is 42nd year for Rajinikanth in his acting career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil