twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 பேர் அமரும் திரையரங்குகள்... கலைப்புலி சேகரன் கோரிக்கை!

    By Chakra
    |

    கலைப்புலி சேகரன் பேசுகிறார் என்றாலே அப்போதைய ரிலீஸ் படங்களின் வசூல் நிலவரத்தைப் புட்டுப் புட்டு வைப்பார் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் இருக்கும்.

    ஆனால் புதுமுகங்கள் சதீஷ் - நீத்து நடித்துள்ள கால்கொலுசு பட இசை வெளியீட்டு விழாவில் சேகரன் பேச்சு பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப திரையுலகில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் சொன்ன யோசனை நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டியதே.

    அவர் கூறுகையில், "நான் வெறும் பரபரப்புக்காக எதையும் பேசுவதில்லை. திரையுலகின் ஆரோக்கியமான போக்குக்கு உதவும் விஷயங்களைத்தான் பேசுவேன். காரணம் என்னைப் போன்றவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலேயே போட்டு, இதிலேயே முடிந்துபோகும் வாழ்க்கைதான் எங்களுடையது.

    இன்றைக்கு படங்கள் நிறைய வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 149 நேரடிப் படங்கள் தமிழில் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. படங்கள் அதிகரிப்பது மகதிழ்ச்சி என்றாலும், அவற்றில் வெற்றி பெறும் படங்களின் எண்ணி்க்கையை நிஎனைத்தால் கவலையாக உள்ளது.

    இன்னும் நூறு படங்கள் வரை தயாராக இருந்தும் தியேட்டர்கள் இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றன.

    வெளியாகும் படங்களுக்கும் கூட்டமில்லை. 1000 பேர், 800 பேர் அமரும் பெரிய திரையரங்குகளில் 20 பேர் கூட இல்லாத நிலை. ஷோக்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இந்த நிலைக்கு இனியாவது மாற்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனி பெரிய பெரிய திரையரங்குகளுக்குப் பதில் 100 பேர் மட்டுமே அமரும் வகையில் சின்னத் திரையரங்குகள் கட்டப்பட வேண்டும். குறைந்த இடம், குறைவான இடவசதி, அதிக பராமரிப்பு செலவில்லாமை என நிறைய பலன்கள் இதில் உண்டு. டிக்கெட் விலையை இந்த தியேட்டரின் வசதிக்கேற்ப நிர்ணயி்த்துக் கொள்ளலாம். படத்தின் விலையையும் அதேபோல நிர்ணயிக்க முடியும். இதுபோன்ற அரங்குகளை சிறிய நகரங்களில் அதிக அளவில் கட்ட வேண்டும்.

    இப்படிச் செய்வதால் சினிமாவை அடுத்த தலைமுறைக்கும் உயிர்போடு கொண்டு செல்ல முடியும். அரசிடம் இதற்கான உதவிகளைக் கேட்டால் நிச்சயம் செய்வார்கள். திரைப்படக் கலை அழிந்துவிடக் கூடாது என்றால் இதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்தாக வேண்டும்", என்றார் சேகரன்.

    இந்த நிகழ்ச்சியின் ஹைலைட், படத்தின் பிஆர்ஓ பெரு துளசி பழனிவேலுக்கு, அந்தப் பட ஹீரோவும் இயக்குநருமான சதீ்ஷ் செய்த மரியாதைதான்.

    தமிழ் சினிமா உலகில் ஒன்றுமே தெரியாமல் நுழைந்த எனக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் துளசி பழனிவேலுதான் என்று கூறி மேடையிலேயே அவர் காலில் விழுந்தார் கண்ணீருடன்.

    "உண்மையிலேயே இவர்கள் யார் என்னவென்று எனக்கும் முதலில் தெரியாது சார். படம் பண்ணனும் என்று வந்தார்கள். அவர்களை பயமுறுத்தாமல் இருக்கிற வாய்ப்பு வசதிகளை எடுத்துச் சொன்னேன். பணத்தையெல்லாம் எதிர்ப்பார்காமல், மூன்று நான்கு முறை படத்துக்கு பப்ளிசிட்டி செய்து கொடுத்தேன். இன்று நல்லபடியாக படம் முடிந்து ஆடியோ ரிலீஸ் வரை வந்திருக்கிறது.

    இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும், ஜெயிக்கணும் என்பதால் எதிர்ப்பார்ப்பில்லாமல் உதவி செய்தேன். அவ்வளதான்", என்றார் துளசி பழனிவேலு.

    படத்துக்கு இசையமைத்தவர்கள் சஞ்சீவ் - சந்தோஷ். அவர்களில் சஞ்சீவ் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி. பாடல்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான், புதிய இசையமைப்பாளர்களை மனதார வாழ்த்தியதோடு, "இந்தப் படத்தி்ன் இசை தன்னை 20ஆண்டுகளுக்கு முந்தைய மெலடி உலகுக்கே அழைத்துச் சென்றுவிட்டதாக", பாராட்டினார்.

    தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன், பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    English summary
    Kalaipuli Sekaran, the president of distributors association requested exhibitors to create small theaters in second grade towns to review Tamil cinema. He made this request in the audio release function of new movie Kaal Kolusu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X