»   »  சந்திரபாபு முதல் சந்தானம் வரை.. காலத்தை வென்ற தமிழ் சினிமா காமெடியன்கள்!

சந்திரபாபு முதல் சந்தானம் வரை.. காலத்தை வென்ற தமிழ் சினிமா காமெடியன்கள்!

Posted By: Soundharya
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்.. என்ற பாட்டுக்கு இணங்க, தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை பார்த்திருந்தாலும், அதில் விரல்விட்டு எண்ணக் கூடிய காமெடியன்கள் அந்தந்த காலகட்டத்தில் மக்களின் வயிறை புண்ணாக்கும் அளவுக்கு நகைச்சுவை மழையை பொழிந்திருப்பார்கள். அவர்களில் குறிப்பிட்ட சில நகைச்சுவை நடிகர்களை பற்றிய சிறு முன்னோட்டத்தை இப்போது பார்ப்போம்.

சந்திர பாபு

சந்திர பாபு

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய மிக சிறந்த காமெடி நடிகர் சந்திரபாபு. இவர் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், பாடகர், இயக்குனர் மற்றும் சிறந்த நடனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர். இவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றே அழைப்பது வழக்கம்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

1940-50களில் பிரபலமான நடிகர் என் எஸ் கே ஆவார். கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். தமிழ் திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர், நடக்க கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் எழுத்தாளர் என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கலைவாணர் நடித்தது சில படங்கள் என்றாலுமே இன்றளவிலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

நாகேஷ்

நாகேஷ்

திரையுலகில் 1960களில் ஆரம்பித்த பயணம் 2008-ம் ஆண்டு வரை 50 வருடங்களாக தொடர்ந்து நாகேஷுக்கு.1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் நடித்த நடிப்புக்காக தேசிய விருதினை பெற்றுள்ளார். இன்றளவில் பேசப்படும் நடிகர்களில் இவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

மனோரம்மா

மனோரம்மா

1960களில் ஆரம்பித்த பயணத்தை தற்போது வரை சலிக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஆச்சி என அன்போடு அழைக்கப்படும் மனோரமா. இதுவரை 1500 திரைப்படங்கள், 1000 மேடை நாடகங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்சிகளில் நடித்த முதல் தமிழ் நகைச்சுவை நடிகையாவார். இவரை சிவாஜிக்கு இணையாக நடிகையரில் திலகம் என்றாலும் தகும்.

கவுண்டமணி

கவுண்டமணி

1980 மற்றும் 90களில் தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்த நகைச்சுவை நடிகர் ஆவார். தனது 16வது வயதில் திரையுலகிற்கு வந்த இவர் நகைச்சுவையையும் தாண்டி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரது நக்கல், நையாண்டிக்கு இன்றைய தலைமுறையும் அடிமைப்பட்டு கிடக்கிறது. கவுண்டமணியின் நடிப்பு மற்றும் டையலாக் டெலிவரி தாக்கம் இன்றி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்களால் பிழைப்பு நடத்த முடியாது. அந்த அளவுக்கு ஆதர்ஷ நாயகனாக திகழ்கிறார் கவுண்டர் மகான்.

செந்தில்

செந்தில்

கவுண்டமணியின் அடி வாங்கும் கதாப்பாத்திரத்திற்கென்றே அளவெடுத்து தைத்தவர் போல முதலில் பல படங்களில் நடித்தவர், பிறகு தனித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தார். கவுடண்மணி மற்றும் செந்தில் நகைச்சுவை என்றாலே மக்கள் மத்தியில் என்றும் நல்ல வரவேற்பை பெரும் வகையில் உள்ளது.

கோவை சரளா

கோவை சரளா

தமிழ் திரையுலகை தன் கைவசம் கொண்டுள்ள மற்றுமொரு நகைச்சுவை நாயகி கோவை சரளா. 1984-ல் அறிமுகமான இவர் துணை கதாபாத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கேற்று நடிக்கிறார். 120 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ள இவரின் சிரிப்பே தனிச் சிறப்பு.

வடிவேலு

வடிவேலு

தமிழ் திரையுலகில் நகைச்சுவையை புயலாக பரப்பியவர் இந்த வைகை புயல். இவரின் வசனங்கள் மட்டுமில்லை இவரின் பாவனைகள் கூட கிச்சுகிச்சு மூட்டும். இன்றளவில் பல்வேறு இடங்களில் பேசப்படும் நகைச்சுவை வசனங்களின் சொந்தகாரரே இவர் தான்.

விவேக்

விவேக்

சின்ன கலைவாணர் என்று புகழப்படும் நடிகர் விவேக், 90'களில் திரையுலகிற்கு வந்தவர். இவர் திரையில் பேசும் நகைச்சுவை வசங்கள் அனைத்தும் ஏதேனும் சமூக கருத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும். நகைச்சுவை சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் என்பதை வலியுறுத்துபவர். வார்த்தைகளில் கருத்தை சுமப்பதாலே, இவர் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்தானம்

சந்தானம்

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக திரையுலகில் பேசியே முன்னுக்கு வருபவர் சந்தானம். தொலைக்காட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி திரையுலகிற்கு வந்தவர். தற்போது நகைச்சுவையில் முதல் இடத்தை தன்வசம் கொண்டுள்ளார்.

English summary
Tamil cinema comedians always remembered by the fans for their acting.
Please Wait while comments are loading...