மௌன ராகம் ரீமேக் ''' ராஜா ராணி ''' பாத்தீங்களா என்று நடிகர் மோகனிடம் ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி...
சென்னை: 80-களில் கமல் ஹாசன், ரஜினிகாந்திற்கு இணையாக வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன்.
பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து பாடல்கள் பாடும் கதாபாத்திரங்களில் நடித்ததால் அனைவராலும் மைக் மோகன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
தற்சமயம் சிறிய இடைவெளிக்குப் பிறகு ஹரா என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் கொடுத்த சுவாரசியமான பதில்கள் இதோ.

ஹரா
நடிகர்கள் மோகன், சாருஹாசன், யோகி பாபு மற்றும் நடிகை குஷ்பு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஹரா. இயக்குநர் விஜய் ஸ்ரீ இத்திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நடிகர் சாருஹாசனை கதாநாயகனாக வைத்து தாதா 87 என்கிற படத்தை இயக்கியவர்தான் விஜய் ஸ்ரீ. ஆக்சன், காதல், சென்டிமென்ட் என அனைத்து விதமான உணர்வுகளும் கலந்த திரைப்படமாக ஹரா உருவாகிறதாம். நடிகர்கள் மனோபாலா மற்றும் மொட்டை ராஜேந்திரன் இதில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மல்டி ஸ்டாரர்
நடிகர் கமல் ஹாசன் தற்சமயம் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்கிறார். நீங்களும் அதுபோல நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் ஏற்கனவே பல படங்களில் பல கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அதனால் இப்போதும் அப்படிப்பட்ட படங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். ஹரா படத்தில் அனைத்து மதங்களையும் அரவணைத்துதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதுள்ள நடிகைகளில் எந்த நடிகை உங்களுக்கு சிறந்த ஜோடியாக இருப்பார் என்ற கேள்விக்கு, எனக்கு அனைத்து நடிகைகளும் பிடிக்கும் என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்
பொன்னியன் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை பார்த்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என்னுடைய படத்தின் பணிகளில் சற்று பிசியாக இருப்பதால் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. கூடிய விரைவில் திரையரங்கில் பார்ப்பேன். இருப்பினும் அதில் பணிபுரிந்தவர்களிடம் தனிப்பட்ட முறையில் கால் செய்து என்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளேன் என்று மோகன் கூறியிருக்கிறார்.

ராஜா ராணி
மணிரத்னம் இயக்கத்தில் நீங்கள் நடித்த மௌன ராகம் திரைப்படத்தை ரீமேக் செய்து ராஜா ராணி படமாக எடுத்து வெற்றி பெற்று விட்டார்கள். அந்தப் படத்தை பார்த்தீர்களா என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் எடக்கு மடக்காக கேட்ட கேள்விக்கு, இன்னும் பார்க்கவில்லை. ஆனால், அந்த படம் வெற்றிகரமாக ஓடி இருக்கிறது என்றால் நீங்கள் அனைவரும் அதனை ரசித்ததால்தான். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பல்வேறூ கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்துள்ளார் மோகன்.


Click it and Unblock the Notifications











