»   »  நான் பட்ட கஷ்டங்கள்: டி ராஜேந்தர்

நான் பட்ட கஷ்டங்கள்: டி ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
எனது தன்னம்பிக்கையால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தேன் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

துபாயில் சன் டிவியின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார் விஜய டி ராஜேந்தர். அப்போது துபாயைச் சேர்ந்த சக்தி FM வானொலிக்கு பேட்டி அளித்தார் ராஜேந்தர்.

அந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார் ராஜேந்தர்.

ராஜேந்தரின் பேட்டியிலிருந்து சில துளிகள் ..

சக்தி FM: திரைத்துறையில் முதல் நிலையை அடைந்து விட்டீர்கள் ?

டி.ஆர்.: 1980 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தலை ராகம் திரைப்படத்தை வெளியிட்டது முதல் ஒவ்வொரு நாளும் பலவற்றையும் கற்று வருகிறேன். இதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனினும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றேன்.

சக்தி FM : திரைப்படக் கல்லூரியில் பயின்ற அனுபவம் உள்ளதா ?

டி.ஆர்.: திரைத்துறையையே ஒரு பல்கலைக்கழகமாக நினைத்து பயின்று வருகிறேன். தன்னார்வத்தின் காரணமாக கவிதை, எழுத்தாற்றல் பேச்சுப்பயிற்சி, பல குரல்களில் பேசுவது, இசை, பாடல் பாடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டேன்.

இதன் காரணமாகவே இயக்குநர், தயாரிப்பு, இசை, பாடல், திரைக்கதை உள்ளிட்டவற்றை நான் கவனித்துக் கொள்ள முடிகிறது.
சிறுவயதில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டங்களுக்குச் சென்று பேச்சாளர்களது பேச்சைக் கேட்டுவிட்டு அதேபோல் பேசிப் பழகிக் கொள்வேன். பல்வேறு தமிழ் இலக்கியங்களை எனது திரைப்படங்களில் பயன்படுத்தி வருகிறேன்.

சக்தி FM: வல்லவன், ஆட்டோ படங்களைத் தொடர்ந்து பாடல்கள் பாடுவீர்களா ?

டி.ஆர்.: இலட்சிய திமுக பொதுச்செயலாளர், திரைப்படத் தயாரிப்பு, சிலம்பரசனுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதன் காரணமாக பாடல் பாட நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது. எனினும் இளம் இசை அமைப்பாளர்கள் தொடர்ந்து என்னை பாடல் பாட என்னை அணுகிய வண்ணம் உள்ளனர்.

சக்தி FM : தமிழக அரசில் என்ன பதவி வகிக்கிறீர்கள் ?

டி.ஆர்.: தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறைத்தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.

சக்தி FM : தற்பொழுது சிலம்பரசன் என்னென்ன படங்களில் நடித்து வருகிறார் ?

டி.ஆர்.: காளை, கெட்டவன், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சிறுவயது முதலே திரைப்பட ஆர்வம் கொண்டிருந்தார்.

சக்தி FM : பிற குழந்தைகள் பற்றி ?

டி.ஆர்.: தனது மகள் தமிழ் இலக்கியா எம்.பி.ஏ. படித்து முடிக்க உள்ளார். மற்றொரு மகன் குறளரசன் பிளஸ் டூ படித்து வருகிறார். விரைவில் கதாநாயகனாக அறிமுகம் ஆக் இருக்கிறார்.

டி.ஆர்.: துபாய்க்கு இது முதல் பயணமா ?

விஜய TR: பல்வேறு முறை துபாய் வழியாக உலகின் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனினும் சன் டிவியின் அரட்டை அரங்கம் வாயிலாக துபாய்க்கு முதல் முறையாக வருகை புரிந்துள்ளேன்.

உறவுகளைப் பிரிந்து பாலைவனமாக இருந்த மன்ணை சோலைவனமாக்கிய துபாயில் பணிபுரிபவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை இந்த அரட்டை அரங்கம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

தனது பேட்டியின் போது விஜயகாந்த் போல் பேசி அவரது ஆசையை கிண்டலடிக்கத் தவறவில்லை விஜய டி ராஜேந்தர்.

Read more about: tr

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil