»   »  'ராஜா'வுக்காக ஒரு இசை நிகழ்ச்சி!

'ராஜா'வுக்காக ஒரு இசை நிகழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Illaiyaraja

மாஸ்ட்ரோ இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டும் வகையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சின்னக் குயில் சித்ரா ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை நடக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை மட்டும் எஸ்.பி.பியும், சித்ராவும் பாடவுள்ளனர். மாலை 6.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பாடவா உன் பாடலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகையின் ஒரு பகுதி, ஸ்மைல் என்கிற எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகளுக்கான தொண்டு அமைப்புக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ.40 லட்சம் வசூலாகும் என விழா ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை ெதரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 லட்சம் மட்டுமல்ல, கூடுதலாக வசூலாகி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்லுதவியாக இருக்க வாழ்த்துவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil