»   »  அபிராமி ராமநாதன் 70வது பிறந்த நாள் விழாவில் நடிகர் விக்ரம் பிரபு!

அபிராமி ராமநாதன் 70வது பிறந்த நாள் விழாவில் நடிகர் விக்ரம் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அபிராமி ராமநாதன்.

இப்போதைய மல்டிப்ளெக்ஸ் கான்செப்டை சென்னையில் அறிமுகப்படுத்தியதில் அபிராமி ராமநாதனுக்கு முக்கியப் பங்குண்டு. அதே போல, திரைப்பட விநியோக முறையை அடியோடு மாற்றியவர் ராமநாதன்தான். அதுவரை ரஜினி படங்களை சென்னையில் ஐந்து அல்லது ஆறு அரங்குகள் வெளியிட்டு வந்தனர். ஆனால் சிவாஜி த பாஸை வாங்கிய அபிராமி ராமநாதன், சென்னையில் மட்டும் 20 அரங்குகளுக்கு மேல் வெளியிட்டு அதிரவைத்தார். நல்ல லாபம் பார்த்து, வழிகாட்டியாக மாறினார்.

Abhirami Ramanathan's 70t6h birthday

தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர், தமிழ் திரைப்பட வர்த்தக சபை மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், விநியோகஸ்தர் என பல முகம் கொண்ட அபிராமி ராமநாதனுக்கு இப்போது வயது 70 முடிந்து, 71 தொடங்குகிறது. அவரது இந்த பிறந்த நாள் நேற்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

Abhirami Ramanathan's 70t6h birthday

இந்த நிகழ்ச்சியில் அவரது துணைவியார் நல்லம்மை ஆச்சி, மகள் மீனாட்சி, மருமகன் பெரியகருப்பன், நடிகர் விக்ரம்பிரபு, தயாரிப்பாளர்கள் எச் முரளி, சிவஸ்ரீ சீனிவாசன், டைரக்டர் பவித்ரன், பி.ஆர்.யூ.யூனியன் தலைவர் டைமண்ட்பாபு, பொருளாளர் விஜயமுரளி, பிஆர்ஓ ஆதம்பாக்கம் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தனர்.

English summary
Veteran Producer and Theater owner Abhirami Ramanathan birthday was celebrated on Saturday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil