»   »  ஐஸ் கர்ப்பமில்லை-அபிஷேக் மறுப்பு

ஐஸ் கர்ப்பமில்லை-அபிஷேக் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறு. அவர் கர்ப்பமில்லை என்று ஐஸ்வர்யாவின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

காதல் மணம் புரிந்து அபிஷேக்கைக் கைப்பிடித்த ஐஸ்வர்யா ராய், கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார். முன்பு போல வெளியுலக நடமாட்டத்தை அதிகம் வைத்துக் கொள்ளாமல், அமிதாப் பச்சன், ஜெயா பச்சனின் மனம் கவர்ந்த மருமகளாக பெரும்பாலும் வீட்டோடு இருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதை அபிஷேக் பச்சனோ அல்லது அமிதாப் குடும்பமோ மறுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஐஸ்வர்யா கர்ப்பமில்லை என்று அபிஷேக் முதல் முறையாக மறுத்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு நற்செய்தியைக் கேள்விப்படும் வாய்ப்பு இதுவரை உண்டாகவில்லை.

அப்படி ஒரு நல்ல செய்தி கிடைத்தவுடன்முதலில் உங்களுக்குத்தான் தெரிவிப்பேன் என்று சிரித்தபடி கூறினார் அபிஷேக்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil