»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒரு நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார் நடிகை அபிதா

ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அந்தப் படத்தில் நடிப்பவர்கள் எவ்வளவு சுமாராக இருந்தாலும் தொடர்ச்சியாகநாலைந்து படங்களில் நடித்து விடுவார்கள். கனகா, சுகன்யா, இப்போது வந்துள்ள சாயாசிங் ஆகியோர்அப்படித்தான் வாய்ப்புகளைப் பெற்றார்கள்.

ஆனால் சேது என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்தும் அபிதாவுக்கு மட்டும் தமிழில் ஒரு ரவுண்ட்வருவதற்கான வாய்ப்புகள் வராமல் போய் விட்டது. சேது வெளியான அதே காலகட்டத்தில் அபிதாமலையாளத்தில் நடித்த ஒரு கவர்ச்சிப் படத்தை தமிழில் தேவதாசி என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டுவிட்டார்கள்.

அதோடு அபிதாவின் மார்க்கெட் டமால் ஆனது. ராமராஜனுடன் ஒரு படம் நடித்தார். பின்பு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. வேறு வழியின்றி டிவி பக்கம் போனார். பட்டுக்கோட்டைபிரபாகர் கதை வசனம் எழுதிய, வரம் என்ற டி.வி. சீரியலில் நடித்தார்.

கதாநாயகி என்று கூப்பிட்டு இரண்டாவது கதாநாயகி வேடம் கொடுத்ததால் அபிதா அப்செட் ஆகி பாதியிலேயேகழன்று கொண்டார். பிறகு கன்னடப் பக்கம் போய் வாய்ப்பு தேடினார். அங்கு ஓரிரு வாய்ப்புகள் கிடைத்து, நடிக்கஆரம்பித்தார்.

அந்தப் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி விட, இப்போது அபிதா ரொம்ப பிஸி. கன்னடத்தில் முன்னணிநடிகர்களான ரவிச்சந்திரன், சிவராஜ்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னுக்குவந்து விட்டாலும், தமிழில் வாய்ப்பு தேடிக் கொண்டே இருந்தார்.

அவரது முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. புனித பூமி என்ற படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாகநடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் முன்னணி கதாநாயகி வாங்கும் சம்பளம்தான், கன்னட படகதாநாயகனுக்குத் தரப்படுகிறது. இப்போது புரிந்திருக்கும் அபிதா ஏன் தமிழ் படங்களில் நடிக்க துடிக்கிறார்என்று.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil