»   »  சிவாஜியை முந்திய மருதமலை

சிவாஜியை முந்திய மருதமலை

Posted By:
Subscribe to Oneindia Tamil


கடந்த 100 நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த சிவாஜியை, அர்ஜூனின் மருதமலை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அர்ஜூனின் அதிரடி, வடிவேலுவின் கலக்கல் காமெடி, நிலாவின் குளிர் தரும் கிளாமர் என சகல சமாச்சாரங்களுடன் உருவாகி, வெளியாகியுள்ள மருதமலை படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 100 நாட்களாக அசைக்க முடியாத முதலிடத்தில் இருந்து வந்த சிவாஜியையே இந்த வாரம் அசைத்துப் பார்த்துள்ளது மருதமலை. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் மருதமலைக்கே முதலிடமும் கிடைத்துள்ளது.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ் கணக்குப்படி முதல் ஐந்து இடங்களில் இருக்கும் படங்கள்

1. மருதமலை - இயக்குநர் சுராஜ். அர்ஜூன் டைப் படமான இப்படத்தின், சமீபத்தில் வெளியான அஜீத்தின் கிரீடம் படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் கிரீடத்தில் இல்லாத ஒரு பெப் இந்தப் படத்தில் இருப்பதால் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகியுள்ளது.

படத்தின் பெரும் பலமே வடிவேலு, அர்ஜூன் அடிக்கும் காமெடி லூட்டிதான். கிட்டத்தட்ட படத்தின் நாயகன் போலவே வருகிறார் வடிவேலு. இவர்கள் இருவரும் இணைந்து பண்ணிய அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் என்றால், இந்தப் படத்தை மெகா ஹிட் என்று சொல்லலாம்.

படத்துக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்திருப்பதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருமே குளிர்ந்து போயுள்ளனராம். 3வது வாரத்திலேயே போட்ட பணத்தில் பாதியை எடுத்து விட்டார்களாம் அத்தனை பேரும்.

2. சிவாஜி - சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் புதிய மணியாக இணைந்துள்ள சிவாஜி, 100 நாட்களாகியும், சவாலுக்குரிய வகையில் சாதனைகளைக் குவித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

3. அம்முவாகிய நான் - பத்மா மகன் இயக்கத்தில், பார்த்திபனின் நடிப்பில், பாரதியின் அழகிய நடிப்பில் ஓடிக் கொண்டிருக்கும் அம்முவாகிய நான் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

4. ஆர்யா - பாலசேகரனின் இயக்கத்தில், மாதவன், பாவனாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்யா, தொடர்ந்து பி மற்றும் சி சென்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

5. உற்சாகம் - ஷெரீன், நந்தா நடிக்க, ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படமும் ரசிகர்களின் இதயத்தில் ஓரமாக இடம் பிடித்துள்ளது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான படம் என்பதால் தற்போது கிடைத்துள்ள வரவேற்பே அந்தப் படத்தின் யூனிட்டுக்கு சந்தோஷமான திருப்தியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஓரளவுக்கு வசூலும் ஆவதால் படத்தை வெளியிட்டவர்களும், வாங்கியவர்களும் திருப்தியாகவே உள்ளனர்.

Read more about: arjun maruthamalai rajini shivaji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil