Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல்.. கனவுகளை துரத்தும் வெற்றிநாயகன்.. ட்ரெண்டிங்கில் அஜித்!
திருச்சி : நடிகர் அஜித்குமார் திருச்சியில் நடைபெற்ற 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பரிசுகளை தட்டித் தூக்கியுள்ளார்.
10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளம் மற்றும் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அசத்தியுள்ளார் அஜித்.
இந்தப் போட்டிகளில் 4 தங்கப்பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அஜித் டீம் பெற்றுள்ளது.
போட்றா
வெடிய...தளபதி
68,
தளபதி
69
டைரக்டர்கள்
இவங்க
தானா?...குஷியான
ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் எப்போதுமே தான் எடுத்துக் கொள்ளும் செயல்களில் தனிக்கவனம் செலுத்தி அதை சிறப்பாக கொடுப்பவர். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்தபோதும் இவரது நடிப்பு மெருகேறியே இருந்தது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்திய போதிலும் ஸ்டண்ட் காட்சிகளை தானே ரிஸ்க் எடுத்து செய்தவர் அஜித்.

அதிகமான ரிஸ்க் காட்சிகள்
இதற்கு இவர் சொல்லும் காரணம். நமக்காக டூப் போடுபவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதுதான். இதனால் இவர் தனது உடலில் அதிகமான காயங்களையும் பெற்றவர். சினிமாவில் தான் ஏற்றுக் கொள்ளும் கேரக்டர் சிறிதாக இருந்தாலும் அதற்காக மெனக்கெட்டு அதை சிறப்பாக்கி விடுவார் அஜித்.

நட்பு பாராட்டும் அஜித்
இதைப் போலவே ஸ்ரீதேவியின் கம்பேக் படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும் இவரது கேரக்டர் அமைந்தது. இதையடுத்தே ஸ்ரீதேவி -போனிகபூருடன் இவரது நெருக்கமும் அதிகரித்து தற்போது போனிகபூர் அஜித்தின் மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறார். அந்த அளவிற்கு தன்னை சூழ்ந்தவர்களுடன் நட்பு பாராட்டுவார் அஜித்.

கனவுகளை தொடரும் அஜித்
அஜித்திற்கு எப்போதுமே பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் அதிகம். அவ்வாறு பல போட்டிகளிலும் கலந்துக் கொண்டு இவர் சிறப்பான பரிசுகளை அள்ளியுள்ளார். நடிப்பிற்கு இடையிலும் தன்னுடைய கனவுகளையும் அஜித் தொடர்ந்து வருகிறார். இந்த ஆர்வம் அவரது சமீபத்திய வலிமை படத்திலும் வெளிப்பட்டது.

பைக் சேசிங் காட்சிகள்
இதில் அதிகமான பைக் சேசிங் காட்சிகள் இடம்பெற்றன. ஹாலிவுட் ரேஞ்சிற்கு இந்தக் காட்சிகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், இதுவே அளவுக்கு அதிகமாக இருந்ததும் இந்தப் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது மாநில அளவில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அஜித்தின் டீம் 4 தங்கங்களையும் 2 வெண்கலங்களையும் தட்டித் தூக்கியுள்ளது.

பிரிட்டன் பயணம்
சினிமாவில் தன்னுடைய இடத்தை சிறப்பாக்கிய அஜித், தன்னுடைய கனவுகளையும் ஒருபுறம் துரத்தி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய ஏகே61 படத்தின் சூட்டிங்கிற்கு இடையில் கிடைத்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்ட அஜித் அங்கு சிறப்பான பைக் மற்றும் கார் பயணங்களில் பங்கேற்றார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டின.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அஜித்
தன்னுடைய உடல்நிலை குறித்து சிறிதும் கவலைக் கொள்ளாமல் கார், பைக் ரேஸ்களில் கலந்துக் கொண்டு தன்னை வெளிப்படுத்திவரும் அஜித், தற்போது துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் பங்கேற்று தங்கங்களை அள்ளியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அஜித்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அவரது ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

அஜித்தின் சமூக அக்கறை
இதுபோன்று தன்னுடைய விருப்பங்களில் கவனம் செலுத்திவரும் அஜித் சமூக அக்கறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய இளம்வயதில் காதலை பெறும் வகையில் நாயகிகளை துரத்திவந்த அஜித், தற்போது ஒரு தந்தையாக தனக்கு சமூக அக்கறை உள்ளது என்றும் அதனால்தான் தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார்.

நிஜத்திலும் ஹீரோ
நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் அஜித் ஹீரோதான் என்பதை பல வகைகளில் நிரூபித்து வருகிறார். சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகளை கடந்த போதிலும் தன்னுடைய ரசிகர்களை மற்ற விஷயங்களில் ஈடுபடுத்தாமல் நேர்மையுடன் செயல்படுகிறார். தன்னுடைய தல என்ற பட்டத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.