Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு!
சென்னை: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் சுக்கிரன், டிஷ்யூம், இருவர் மட்டும் போன்ற பல படங்களில் இசையமைத்திருந்தார்.
நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி .
முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் விஜய் ஆண்டனி முதல் முதலில் போட்ட ட்யூனை பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.
மோதிரம்
கொடுத்து
காதலை
சொன்ன
அமீர்..எவ்வளவு
நாளைக்குத்தான்
இந்த
காதல்
நாடகம்..சீக்கிரம்
முடிங்கப்பா!

பல வெற்றிகள்
2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, டிஷ்யூம், இருவர் மட்டும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2006 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு வெளியான நான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தனது முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார் விஜய் ஆண்டனி.

தட்டி தூக்கிய பிச்சைக்காரன்
நான் படத்தைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்கள் தோல்வியை தழுவிய போதிலும், பிச்சைக்காரன் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்றார். தனது எதார்த்தமான நடிப்பாலும், அமைதியான பேச்சாலும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது இருந்து வருகிறார்.
இவர் இசையமைத்த அவள் பெயர் தமிழரசி, அங்காடி தெரு, உத்தமபுத்திரன், வெடி, வேலாயுதம் போன்ற பட படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

தனக்கேற்ற கதை
நான் படத்திற்கு பிறகு தான் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் தானே இசை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அம்மாவிற்காக பிச்சை எடுக்கும் மகனின் பாசத்தை இந்த படத்தில் தெளிவாக காட்டி இருந்தனர். இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தை எழுதி இயக்கியவர் சசி. இப்படத்திற்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

பன்முக திறமை
சைத்தான், எமன், அண்ணாதுரை, காலி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் போன்ற பல படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்துள்ளது. நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் வெளிவர தயாராக இருக்கும் நிலையில், காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவரது பாடலுக்கும் குரலுக்கும் இசைக்கும் பல ரசிகர்கள் இருக்கும் வேளையில் விஜய் ஆண்டனி முதல் முதலில் போட்ட ட்யூனை பற்றி அவரை கூறிய வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

முதல் பாடல்
எப்படிப்பட்ட கலைஞனாக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் பல விஷயங்களை சொதப்பி இருப்பார்கள். அதேபோல் விஜய் ஆண்டனி முதல் முதலில் போட்ட ட்யூனை பற்றி கூறியுள்ளார். முதல் முதலில் நீங்கள் போட்ட ட்யூனை பற்றி சொல்லுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, ஒரு பாட்டுக்கு நான் ட்யூனை போட்டேன், அது பாடினால் ரொம்ப கேவலமாக இருக்கும் பரவாயில்லையா என்று கேட்டுள்ளார். பரவால்ல பாடுங்கள் என்று கூறியவுடன் பாடலை பாட தொடங்கினார் விஜய் ஆண்டனி, இந்த பாடலில் இடப்பற்றுள்ள வரிகள் "மாடு தாண்டா பாலகறக்கும், அந்தப் பால் இங்கே தயிரா மாறும், தயிரில் இருந்து வெண்ணை கிடைக்கும், அந்த வெண்ணை அப்புறம் நெய்யா மாறும்"என்று பாடி முடித்தார். இந்த பாடலை பாடியவுடன் குலுங்கி குலுங்கி சிரித்தார் விஜய் ஆண்டனி. இதைக் கேட்ட விஜய் ஆண்டனியின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இந்த பாடலை பகிர்ந்து வருகின்றனர்.