»   »  சிரஞ்சீவி மகள் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம்

சிரஞ்சீவி மகள் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம்

Subscribe to Oneindia Tamil


ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, வீட்டை விட்டு ஓடிப் போய் தனது காதலரை கல்யாணம் செய்து கொண்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click here for more images
நடிகர் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா. இவரும் சிரீஷ் பரத்வாஜ் என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதல் சிரஞ்சீவிக்குத் தெரிய வந்ததையடுத்து அவர் ஆத்திரமடைந்தார்.

சினிமாவில் மட்டும் காதலுக்கு மரியாதை செய்த அவர் நிஜத்தில் காதலுக்கு எதிரியாக மாறினார். தனது மகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டோடு சிறை வைத்தார். காதலனையும் மறக்கும்படி உத்தரவிட்டார்.

கடந்த ஒரு வருடமாக கல்லூரிக்குப் போகாமல் வீட்டுக் காவலில் இருந்து வந்தார் ஸ்ரீஜா. ஆனால் காதலுக்குத்தான் வலிமை ஜாஸ்தியாயிற்றே. தனது வீட்டுக் காவலையும் மீறி, வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றி விட்டு காதலனுடன் ஓடிப் போனார் ஸ்ரீஜா.

இன்று ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ மடத்தில் வைத்து காதலரை கல்யாணம் செய்து கொண்டார் ஸ்ரீஜா.

கல்யாணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை இருவரும் தம்பதி சமேதராக சந்தித்தனர். ஸ்ரீஜா கூறுகையில், நானும், சிரீஷும் கடந்த நான்கு ஆண்டுளாக காதலித்து வருகிறோம். ஆனால் எனது பெற்றோர் இந்த்க காதலை ஏற்கவில்லை.

கடந்த ஒரு வருடமாக என்னைக் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டுக் காவலில் வைத்து விட்டனர்.

எனது குடும்பத்திடமிருந்து எனக்கும், சிரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இன்று மாலை எனது வீட்டுக்கு இருவரும் சென்று குடும்பத்தினரின் ஆசியைப் பெறத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

சிரீஷ் பரத்வாஜ் கூறுகையில், இது ஜாதி விட்டு ஜாதி செய்த காதல் கல்யாணம். ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் எங்களை மிரட்டினர்.

ஸ்ரீஜாவின் தந்தை மிகவும் சக்தி வாய்ந்தவர், அரசியல் பலமும், ஆள் பலமும் கொண்டவர். எனவே எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது பெற்றோருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.

சிரஞ்சீவியின் மகள் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்தது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: andhra, chiranjeevi, daughter, srijah
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil