Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கார்த்தியிடம் உள்ள அந்த நாகரீகம். எந்த நடிகரிடமும் நான் பார்த்ததில்லை.. நடிகர் நெப்போலியன் பெருமிதம்!
சென்னை : தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இதுவரை கலக்கிக் கொண்டிருந்த நடிகர் நெப்போலியன் இப்பொழுது ஹாலிவுட் வரையிலும் சென்று படங்களில் நடித்து வருகிறார்
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்து கலக்கியிருப்பார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் கார்த்தியிடம் உள்ள அந்த நாகரீகத்தை நான் எந்த நடிகருக்கும் பார்த்ததில்லை என நெப்போலியன் வியந்து பாராட்டியுள்ளார்.
விஜய்க்காக
அப்பாவிடம்
சண்டை
போட்டிருக்கேன்..
தளபதி
66
படம்
குறித்து
வெளிப்படுத்திய
ராஷ்மிகா!

ஹாலிவுட்டிலும் பட வாய்ப்புகள்
ஆறடி உயரம் அசர வைக்கும் நடிப்பு பார்த்தவுடனேயே பிரம்மாண்ட தோற்றம் என தமிழ் ரசிகர்களை பெரிதும் வசீகரித்து வெற்றிகரமான நாயகனாக தமிழ் சினிமாவில் இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நெப்போலியனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.m தமிழில் எண்ணற்ற வெற்றி படங்களை கொடுத்த நெப்போலியனுக்கு இப்பொழுது ஹாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது தமிழில் படங்களில் நடிக்கும் அதேசமயம் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகராக உள்ளார்

பிரம்மாண்ட பொருட்செலவில்
நடிகர் நெப்போலியன் தமிழில் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருப்பார் ரெமோ வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இதுவரை தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டது.

கார்த்திக்கு அப்பாவாக
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது இப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடிகர் நெப்போலியன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பிரபல மலையாள நடிகர் லால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து தமிழில் நேரடியாக அறிமுகமாகி இருப்பார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன் கார்த்தியிடம் உள்ள அந்த நாகரீகமான பழக்கம் எந்த ஒரு நடிகர் இடமும் பார்த்ததில்லை என புகழ்ந்து பாராட்டி உள்ளார்

கார்த்தியிடம் உள்ள அந்த நாகரீகம்
அதாவது சுல்தான் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு டப்பிங் பேசி விட்டு அன்று இரவு ஹோட்டலில் இருந்து ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நெப்போலியனை நடிகர் கார்த்தி நேரில் அந்த ஹோட்டலுக்கே சென்று நடித்து கொடுத்ததற்கு நன்றி என தனது நன்றிகளை தெரிவித்து விட்டு செண்ட் ஆப் செய்து வைத்ததாக நெப்போலியன் கூறியுள்ளார். மேலும் இந்த நாகரீகமான பழக்கம் கார்த்திகை தவிர வேறு எந்த நடிகர் இடமும் இதுவரை நான் பார்த்ததில்லை என நடிகர் வியந்து பாராட்டியுள்ளார்.