»   »  'அந்த' பரபரப்புல நம்ம நடிகர் கார்த்திக்கை மறுந்துட்டீங்களேப்பா!

'அந்த' பரபரப்புல நம்ம நடிகர் கார்த்திக்கை மறுந்துட்டீங்களேப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நவரச நாயகன் கார்த்திக் செவ்வாய்க்கிழமை தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் கோலிவுட் வந்தவர் கார்த்திக். நவரச திலகம் முத்துராமனின் மகனான அவரும் நவரசங்களை வெளிப்படுத்துவதில் வல்லவர். அதனால் தான் அவருக்கு நவரச நாயகன் என்ற பட்டம் கிடைத்தது.

நடிப்பில் மட்டும் அல்ல நடனம் ஆடுவதிலும் வல்லவர் கார்த்திக்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

கார்த்திக் செவ்வாய்க்கிழமை தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் அமைதியாக கொண்டாடினார்.

கார்த்திக்

கார்த்திக்

வெற்றிலை போட்டு வாயில் குதக்கி வைத்தது போன்று கார்த்திக் பேசினாலும் அதுவும் ஒரு அழகு என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். கார்த்திக்கை நடனம் ஆட வைப்பது மிகவும் எளிது, அவர் ஸ்டெப்ஸுகளை சீக்கிரமே புரிந்து கொண்டு ஆடுவார் என்று டான்ஸ் மாஸ்டர்கள் தெரிவித்துள்ளனர்.

துள்ளல்

துள்ளல்

துருதுருவென உள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக். நகரத்து ஹீரோவாக மட்டும் அல்ல வேட்டி, சட்டை போட்டுக் கொண்டு கிராமத்து கதாபாத்திரங்களிலும் அவர் அசத்தியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா

உள்ளத்தை அள்ளித்தா

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கார்த்திக் சுந்தர் சி.யின் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஹீரோவாக மட்டும் அல்ல தன்னால் வில்லனாகவும் நடிக்க முடியும் என்பதை அனேகன் படத்தில் நிரூபித்தார்.

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

மகன் நடிக்க வந்த பிறகும் கார்த்திக் தொடர்ந்து நடிப்பில் முத்திரை பதித்து வருகிறார். கார்த்திக்கை ஹீரோவாக மட்டும் அல்ல வில்லனாகவும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

English summary
Actor Karthik celebrated his 56th birthday on tuesday. He celebrated the big day with family and friends.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil