»   »  திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்!

திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நகுல்- ஸ்ருதி திருமணம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

நடிகை தேவயானியின் தம்பியான நகுல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாவும், அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை.

அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். பின்னர் கடந்த நவம்பர் 14 ம் தேதி நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் அவரின் காதலி ஸ்ருதி பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

இந்நிலையில் இன்று காலை நகுல்-ஸ்ருதி பாஸ்கர் திருமணம் சென்னையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

சமையற்கலைஞரான ஸ்ருதி தற்போது வீட்டிலேயே இனிப்புகள் மற்றும் கேக்குகள் ஆகியவற்றை தயார் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரின் திருமணத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் தொலைபேசி மூலமாகவும் ஏராளமானவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேவயானி அவரது மூத்த தம்பி மயூர் ஆகியோர் ஏற்கனவே காதல் திருமணம் புரிந்த நிலையில், தற்போது நகுலும் அந்த வரிசையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Nakul-Shruthi Wedding today held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil