twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படிக்க வந்து நடிக்க துவங்கிய நடிகர் ரவிச்சந்திரன்...நினைவுநாள் நினைவலைகள்

    |

    சென்னை : 1970 களில் தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் ரவிச்சந்திரன்.நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் நினைவுநாள் இன்று.

    ஜுலை 24 ம் தேதி ரவிச்சந்திரனின் பிறந்தநாள் என்றால் அடுத்த நாளான ஜுலை 25 அவருடைய நினைவுநாள். இந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்த அவரின் வாழ்க்கை பற்றிய இன்றைய தலைமுறையினர் அறிய, கொஞ்சும் இங்கே புறப்பட்டி பார்ப்பாம்.

    1960-70களில் முன்னணி ஹீரோவாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ரவிச்சந்திரன்.திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

    முடிச்சிப்போட்ட சட்டையில்… குஷி பட ஜோதிகா போல இடுப்பைக்காட்டும்… தான்யா ரவிச்சந்திரன்!முடிச்சிப்போட்ட சட்டையில்… குஷி பட ஜோதிகா போல இடுப்பைக்காட்டும்… தான்யா ரவிச்சந்திரன்!

    படிக்க வந்து நடிகரானார்

    படிக்க வந்து நடிகரானார்

    ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன்.ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார் ரவிச்சந்திரன். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

    முதல் படம் செம ஹிட்

    முதல் படம் செம ஹிட்

    சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கதாநாயகனானார். அறிமுக படமே அவருக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.அத்துடன் அவருக்கு நல்ல ‌பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்த படத்தில் வரும் "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் ஹிட் ஆகி, ரவிச்சந்திரனுக்கென ரசிகர்களை உருவாக்கியது.

    மறக்க முடியாயுமா இந்த படங்களை

    மறக்க முடியாயுமா இந்த படங்களை

    "காதலிக்க நேரமில்லை" படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தார் ரவிச்சந்திரன். குறிப்பாக இவர் நடித்த "அதே கண்கள்", "இதய கமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரனும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். ரவிச்சந்திரன் ஸ்டைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.

    வில்லனாக மாறிய ஹீரோ

    வில்லனாக மாறிய ஹீரோ

    ஹீரோவாக நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது. அந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.

    ரஜினி - கமலுடன் நடிப்பு

    ரஜினி - கமலுடன் நடிப்பு

    ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'ஊமை விழிகள்' படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், சப்போர்டிங் கேரக்டர்களில் வலம் வந்தார். ரஜினிகாந்துடன் 'ராஜாதி ராஜா', 'அருணாசலம்', கமல்ஹாசனுடன் 'பம்மல் கே சம்பந்தம்' ஆகிய படங்களில் நடித்தார்.

    ரவிச்சந்திரனின் குடும்ப வாழ்க்கை

    ரவிச்சந்திரனின் குடும்ப வாழ்க்கை

    சிறுநீரகக் கோளாறு காரணமாக 25-07-2011 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி விமலா அவர்களை 1963ம் ஆண்டு மனம் முடித்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பாலாஜி. இவர் தொழில் அதிபர். இரண்டாவது மகன் ஹம்சவரதன் இவர் பிரபல ஹீரோ என்பது நாம் அறிந்த விஷயம். லாவண்யா என்ற மகளும் உள்ளார். மலையாள முன்னணி நடிகை ஷீலாவை இரண்டாவதாக 1972ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரவிச்சந்திரன்.இவருக்கும் ஷீலாவிற்கும் பிறந்த ஜார்ஜ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தார்.

    ரவிச்சந்திரனின் மறக்க முடியாத படங்கள்

    ரவிச்சந்திரனின் மறக்க முடியாத படங்கள்

    இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கெளரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, ஊமை விழிகள், ராஜாதி ராஜா, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், ரமணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.மானசீக காதல்,மந்திரன் உள்பட 7 படங்களை ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.

    ரவிச்சந்திரன் பற்றிய சுவாரஸ்யங்கள்

    ரவிச்சந்திரன் பற்றிய சுவாரஸ்யங்கள்

    இவர் 1986 ல் ஒளிபரப்பான ஜீ பும்பா என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.ரவிச்சந்திரனுக்கு திரையுலகில் ரொமான்டிக் ஹீரோ, வெள்ளி விழா கதாநாயகன், வண்ணப்பட நாயகன், எவர்கிரீன் ஹீரோ, சின்ன எம்ஜிஆர், கலைஞர் திலகம், கலை செல்வன், புதுமை திலகம் என பல டைட்டில்களை டைரக்டர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கொடுத்துள்ளனர்.

    English summary
    Today Vetrian actor Ravichandran's death anniversary. On this day, here we discussed about his career and life journey. He acted more than 100 films. He also a direct and produce some movies in tamil, malayalam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X