»   »  'லெஜண்ட்' செந்தில் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDLegendSenthil

'லெஜண்ட்' செந்தில் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDLegendSenthil

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலுக்கு பிறகு போடுகிற அத்தனை கெட்-அப்பும் செட் ஆகிற ஒரு தமிழ் நடிகர் செந்தில் தான். இதைச் சொன்னால் பலர் சண்டைக்கு கூட வரலாம். ஆனால் உண்மையிலே செந்திலுக்கு செட் ஆகாத கெட்-அப்பே இல்ல. செந்தில் நடிக்க வரும்போதே அவருக்கு வயது 28. செந்திலின் முதல் படம் 'பசி'. அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் தான் விஜயன் எடுபிடியாக வருவார். அவர் நடிக்க வரும்போதே முன்தலையில் முடி இல்லை. பசி படத்துக்கு பின் சில படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டடினார். தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியாரின் வேலையாளாக நடித்து இருப்பார். அந்த படம் தான் செந்திலுக்கு பிரேக்.

கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த பின் செந்தில் போட்டது முழுக்க புதுப்புது கெட்-அப்கள் தான். கோமுட்டி தலையன், ஆண்டி பண்டாரம், ஆபிசர், நாட்டு புறத்தான், தவில் வித்வான் என எந்த கெட்-அப் போட்டாலும் அவருக்கு அப்படியே பொருந்தும். "நாதஸ், RTOஆபீசர், பன்னீர்செல்வம், அழகேசன், மானஸ்தன், பப்லு, வெள்ளையன், விக்கி, ஐ தவுசன்ட் , ஜூனோ, ஒண்டிப்புலி " போன்ற எண்ணற்ற கதாபத்திரங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் செந்தில்.

'மகாபிரபு' படத்தில்

"ஸ்டார்மூவிஸில் இருந்து வரீங்க அதனால பேட்டி தரேன். பேசிக்கா நான் ஒரு நார்த் இந்தியன். என் அசிஸ்டன்ட் இரண்டு பேருதான் தமிழ்நாட்டுக்காரங்கோ"

Actor Senthil birthday special article

"உங்களுக்கு அசிஸ்டன்ட் வேற இருக்காங்களா?"

பாக்கு துப்பிட்டு "தோன்னு ஹிந்தில சொல்றது இரண்டு பேரு ஒருத்தர் சூப்பர்மேன், இன்னொருத்தர் Simply waste No comments"

கவுண்டமணி வந்ததும் ஆப் தி டிவின்னு சொல்றது..

ஜென்டில்மேன் படத்தில் "இரண்டு வெள்ளை புறா ஜொய்ன்னு பறந்து போச்சுன்னா"

"நீங்க SSLC பெயில் அண்ணே, நான் ஏழாவது பாஸ்"

வைதேகி காத்திருந்தாள் படத்தில்

"இது எப்படிண்ணே எரியும்?

"என்னண்ணே உடைச்சுப்புட்டிங்க"

கோயில் காளை படத்தில்

"அண்ணே சிவப்புடா, பாரு சிவப்பு சட்டை போட்டுருக்காரு"

ராஜகுமாரன் படத்தில்

"இந்த மூஞ்சிக்கே உங்களைப் பிடிக்கலியே"

உத்தமராசா படத்தில்

"தண்ணிக்குள்ள கற்பழிச்சா கற்பு அழிஞ்சுறாது",

"பாஸ் என் பாக்கெட்ல பத்து பைசா வெச்சு இருந்தேன் அதை காணோம் பாஸ்",

என் ராசாவின் மனசிலே படத்தில்

"உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டியா"ன்னு கேக்குறது என எல்லாமே கலக்கல் காமெடி.

'ஜீன்ஸ்' படத்தில் சந்தேகப்பட்டுக்கொண்டு சரியான கேள்வி கேட்பது, 'பாய்ஸ்' படத்தில் ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் பச்சக்ன்னு ஒட்டிகொள்வார் "Information is wealth"

'அருணாச்சலம்' படத்தில் ரஜினி முன்னாடி ரஜினி ஸ்டைல் பண்ணுவது எல்லாம் உச்சகட்டம்

"இது முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்படும் ஆங்கிலத் திரைப்படம்"

"ஹேய் மாப்ள சொல்றதை செய்".

Actor Senthil birthday special article

செந்திலுக்கு பெரிய பிளஸ் அவரோட அப்பாவித்தனமான முகம். செந்தில் வசனங்கள் மூலமாக நகைச்சுவை செய்யத் தேவையில்லை அவர் முகத்தைப் பார்த்தாலும், அவரோட உடல்மொழியிலேயே சிரிப்பு வரவைத்து விடுவார். செந்தில் அவர் முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள், வசனங்களை அவர் வெளிப்படுத்தும் முறை. (நான்சென்ஸ் மாதிரி பேசாதிங்கன்னே). கவுண்டமணியும் செந்திலும் நம்மூர் லாரல்-ஹார்டி என்று சொல்வார்கள். கவுண்டமணியும் செந்தில் இணைந்து நடித்த படங்களில் எல்லாமே காமெடி செமயா வொர்க் அவுட் ஆகி இருக்கும்.

கவுண்டமணி இல்லாமல் தனியாக செந்தில் செய்யும் நகைச்சுவைகளும் ரசிக்கும்படியே இருக்கும். கவுண்டமணியிடம் அடிவாங்கியே பல படங்களில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து இருக்கார். வெறும் நகைச்சுவை மட்டுமல்ல நம்மவர் படத்தில் குணச்சித்திர கேரக்டரை கூட சிரத்தை இல்லாமல் இயல்பா செய்து இருப்பார். கவுண்டர் மகானுக்கு கிடைத்த அங்கீகாரம், புகழ் செந்திலுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. இனிய பிறந்த டே வாழ்த்துக்கள் செந்தில்!

-சரத் பாபு

English summary
Comedy actor Senthil's birthday today. Here is an article to tribute Senthil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X