»   »  சின்னத் திரை அழகி சந்தோஷி

சின்னத் திரை அழகி சந்தோஷி

Subscribe to Oneindia Tamil

சின்னத் திரையில் ஜொலித்து வரும் அழகிய நடிகைகளுக்கான அழகிப் போட்டி சென்னையில் நடந்தது. இதில் சந்தோஷி சின்னத் திரை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தடுக்கி விழுந்தால் அழகிப் போட்டி என்றாகி விட்ட காலம் இது. மிஸ்.மூடுவார்பட்டி, மிஸ்.கூடுவாஞ்சேரி, மிஸ்.கும்மிடிப்பூண்டி என தமிழக மக்கள் கலக்கலான கலர் கலரான அழகிப் போட்டிகளை நடத்தி அசத்துகிறார்கள்.

மிஸ்ஸுக்கு மட்டும்தான் அழகிப் போட்டியா என்று கேட்டு சிலர் திருமதிகளுக்கும் அழகிப் போட்டிகளை நடத்தி அசத்துகிறார்கள். அப்புறம், அழகான அம்மா-மகள் போட்டியும் கூட ஆங்காங்கே நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சின்னத்திரை வரலாற்றிலேயே முதல் முறையாக டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள லா மைக்கேல் கிளப்பில் நடந்தது.

டிவி தொடர்களில் அழுமூஞ்சிகளாக கலக்கி வரும் பல நடிகைகள் தேவதை போல இங்கு காட்சி அளித்தது படு வித்தியாசமாக இருந்தது. சந்தோஷி, நீபா, லாவண்யா, ஐஸ்வர்யா, நீலிமா, தீபா, காஜல், ஷில்பா, அருணாதேவி என பல டிவி நடிகைகள் படு பளபளப்பாக போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டி நடுவர்களாக நடிகைகள் அம்பிகா, டாக்டர் ஷர்மிளா, இயக்குநர் மாதேஷ், நடிகர் பிருத்விராஜ் (பப்லு), பேஷன் டிசைனர்கள் லாவண்யா, அபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேட் வாக், உடையலங்காரம், முக அலங்காரம் என பல பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் அத்தனையிலும் அதிக மார்க் பெற்று சந்தோஷி சின்னத் திரை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நடிகர் பரத் கிரீடம் சூட்டி பாராட்டும் தெரிவித்தார்.

2வது இடத்தை ஐஸ்வர்யாவும், 3வது இடத்தை காஜலும் பெற்றனர். சிறந்த உடல் அழகியாக நீலிமா, ஸ்கின் அழகியாக தீபா, கண்ணழகியாக நீபா, நடையழகியாக அருணாதேவி, புன்னகை அழகியாக லாவண்யா, கூந்தல் அழகியாக அகிலா ஆகியோர் தேர்வாகினர்.

அழகிப் போட்டியையொட்டி சின்னத் திரை நட்சத்திரங்களான பூஜா, திவ்யதர்ஷினி, தீபக், சஞ்சீவ் ஆகியோர் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் அசத்தலாக நடந்தது.

இந்த நிகழச்சி முடிந்ததும், நட்சத்திரங்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பெரிய காக் டைல் விருந்து நடந்தது.

இந்த விருந்தில் கலந்துக் கொண்ட சின்னத்திரை நட்சத்திரங்களான தேவதர்சினி, அம்பிகா, பூஜா, நீலிமா, பப்லு, விஷ்வா ஆகியோர் ஓவர் குஷியில் ஆட்டம் போட ஆரம்பித்தனர். இது பேஷன் ஷோவை விட கிராண்ட் ஷோவாக இருந்தது.

அழகிப் போட்டியை முடித்து விட்டு அடுத்ததாக ஒரு காக்டெய்ல் பார்ட்டியில் அத்தனை பேரும் அம்சமாக கலந்து கொண்டனர். அழகிப் போட்டியில் இடம்பெற்ற நடனத்தை விட இந்த தண்ணிப் பார்ட்டியின்போது நடிகைகள் போட்ட ஆட்டம்தான் படு குமுக் ஆக இருந்ததாம்.

பார்ட்டியில், போட்டியில் பங்கேற்ற அழகிகள், டிவி நடிகைகள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பார்ட்டி உச்சகட்டத்திற்குப் போனபோது, நடிகை அம்பிகா, பூஜா, நீலிமா, தேவதர்ஷினி, நடிகர் பப்லு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நடிகர் விஷ்வா ஆகியோர் போட்ட ஆட்டம் படு அமர்க்களமாக இருந்ததாம்.

அம்பிக்கு வயதானாலும், வாலிபம் போகவில்லை என்பதை அவர் போட்ட ஆட்டம் வெளிக் காட்டியதாம். பேஷன் பரேடை தூக்கிச் சாப்பிட்டு விட்டதாம் இந்த ஏ கிரேட் ஆட்டம்.

போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil