»   »  தொழில் அதிபரை மணந்தார் பிரகாஷ்ராஜின் செல்ல மகள்

தொழில் அதிபரை மணந்தார் பிரகாஷ்ராஜின் செல்ல மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரபல கன்னட நடிகை அமுல்யாவுக்கும், தொழில் அதிபர் ஜெகதீஷுக்கும் இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.

குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் நடித்து ஹீரோயின் ஆனவர் அமுல்யா(23). பிரகாஷ் ராஜ் அபியும், நானும் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்தவர் அமுல்யா.


அவருக்கும் தொழில் அதிபர் ஜெகதீஷுக்கும் இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.


திருமணம்

திருமணம்

திருமணத்திற்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்களே அழைக்கப்பட்டிருந்தனர். வரும் 16ம் தேதி நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்க உள்ளார்களாம்.


ஜெகதீஷ்

ஜெகதீஷ்

ஜெகதீஷ் பிரபல அரசியல்வாதி ஜி.ஹெச். ராமசந்திராவின் மகன். ஜெகதீஷ் லண்டனில் பிசினஸ் செய்கிறார். மேலும் பெங்களூரிலும் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார்.


அமுல்யா

அமுல்யா

பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவி தான் ஜெகதீஷை அமுல்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நட்பு காதலாகி திருமணம் வரை வந்துள்ளது.


சினிமா

சினிமா

அமுல்யா திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் முகுலு நாகே படம் தான் அமுல்யாவின் கடைசி படம் என்று அவரின் தாய் நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Popular Kannada actress Amulya has got married to businessman Jagadish in Bengaluru on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil