விடுமுறைக்கு ஊட்டி சென்றுள்ள நடிகை பூமிகா.. ஒரே ஆட்டம், பாட்டம் தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூமிகா.

Recommended Video

Liger Review | என்ன வம்புல மாட்டி விடுறீங்களா? - Cool Suresh

பத்ரி படத்தில் விஜய், பூமிகா மோனல், விவேக், ரியாஸ் கான் போன்ற பலரும் நடித்திருந்தனர். ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நடிகை பூமிகா இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்றார்.

சமீபத்தில் விடுமுறைக்காக பூமிகா ஊட்டி சென்றுள்ளார். அவர் அங்க செய்த விஷயங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது.

 ஹோம்லி லுக் கதாபாத்திரங்கள்

ஹோம்லி லுக் கதாபாத்திரங்கள்

பத்ரி படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற நடிகை பூமிகா, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் என்று செலக்டிவ்வான படங்களிலேயே நடித்தார். விஜயுடன் இணைந்து நடித்த பத்ரி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், ரோஜா கூட்டம் படத்திலும் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூமிகா. ரோஜா கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கோண காதல் கதையாக உருவாக்கப்பட்டிருந்த ரோஜா கூட்டம் படம் இன்றும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

 தெலுங்கில் கவனம் செலுத்திய பூமிகா

தெலுங்கில் கவனம் செலுத்திய பூமிகா

தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூமிகா, ஒகடு படத்தில் பிரமாண்டமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தின் ரீமைக்கே தமிழில் கில்லி என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் பூமிகா நடித்திருந்த கதாபாத்திரங்களில் தமிழில் விஜய் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழிலும் இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகை பூமிகாவின் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது. சூர்யா மற்றும் ஜோதிகா நடித்திருந்த இந்த படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார் பூமிகா.

 ஹோம்லி மற்றும் மாடர்ன் பெண்ணாக பூமிகா

ஹோம்லி மற்றும் மாடர்ன் பெண்ணாக பூமிகா

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த பூமிகாவின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அதேபோல், வெளிநாட்டிலிருந்து வரும் பூமிக்காவின் மாடர்ன் கதாபாத்திரமும் பிரபலமாக பேசப்பட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுது பூமிகாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூர்யா என்று அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தது. அதன் பிறகு சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பூமிகா வெளிநாட்டிற்கு செல்ல, ஜோதிகாவை ஒரு மனதாக திருமணம் செய்து கொள்வார், பல வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு வரும் பூமிகா, சூர்யாவை சந்திக்கும் காட்சிகள் என்று படம் முழுவதும் பரபரப்பாகவும், எமோஷனலாகவும் எடுத்திருந்தனர்.

 ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

தமிழ், தெலுங்கில் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பூமிகா. தமிழில் களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் போன்ற படங்களில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். குறிப்பிட்ட சில படங்களிலேயே பூமிகா நடித்திருந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் விடுமுறை காரணமாக ஊட்டிக்கு சென்றுள்ள பூமிகா, அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

 குஷியில் பூமிகா

குஷியில் பூமிகா

விடுமுறையை ஊட்டியில் கழித்து வரும் பூமிகா, தனது பிறந்த நாளன்று அங்கே இருக்கக்கூடிய முதியோர் இல்லத்தில் சந்தோஷமாக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று என்ஜாய் செய்துதுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X