For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷூட்டிங் பாதியிலேயே ஓடிப்போன ஹீரோயின்... பிரசாந்த் படத்தில் நடந்த கலவரம்!

  |

  சென்னை: 80 மற்றும் 90களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருந்தவர் நடிகர் பிரசாந்த்

  சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்

  இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரசாந்தின் அப்பா தியாகராஜன் பிரசாந்த் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகை ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே ஓடிய சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

  கல்யாணம் குறித்து கசிந்த தகவல்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விக்னேஷ் சிவன்! கல்யாணம் குறித்து கசிந்த தகவல்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விக்னேஷ் சிவன்!

  உச்சத்தில் இருந்த பிரசாந்த்

  உச்சத்தில் இருந்த பிரசாந்த்

  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ள தியாகராஜன் தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் இயக்குனராகவும் உள்ளார். அவரது மகன் பிரசாந்த் 90களில் முன்னணி ஹீரோவாக பல வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார் . வைகாசி பொறந்தாச்சு மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த் அதை தொடர்ந்து தொட்டதெல்லாம் பொன் போல நடித்த அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. 80 மற்றும் 90களில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அனைத்துத் திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற உச்சத்தில் இருந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாக திரைப்படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது.

  பிரம்மாண்ட பொருட்செலவில்

  பிரம்மாண்ட பொருட்செலவில்

  சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்த் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து ஆயுதம்,ஜாம்பவான்,தகப்பன்சாமி, என ஆக்சன் கதைகளில் நடிக்க தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்திற்கு பிறகு பிரசாந்துக்கு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அதன்பிறகு 2011 ஆண்டு கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் பொன்னர் சங்கர் என்ற வரலாற்று சிறப்புமிக்க கதையில் பிரசாந்த் நடித்தார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழர் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகவும் பின்தங்கியே இருந்தது.

  அந்தகன்

  அந்தகன்

  மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீவிரமாக இருக்கும் பிரசாந்த் மம்பட்டியான், புலன் விசாரணை 2, சாகசம், ஜானி மற்றும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் தமிழ் ரீமேக் அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  இந்த நிலையில் பிரசாந்த் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிய தகவலை இயக்குனர் தியாகராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

  நடிகை நிலா ஹீரோயினாக

  நடிகை நிலா ஹீரோயினாக

  தென்னவன் படத்தை இயக்கிய இயக்குனர் நந்த குமார் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜாம்பவான். ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகை நிலா ஹீரோயினாக நடித்து வந்தார். அப்பொழுது வில்லேஜ் செட்டப்பில் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. பிரசாந்த் மற்றும் நிலா தண்ணீர் தொட்டியில் குளிக்கின்றவாறு அந்தக் காட்சி எடுக்கப்பட இருந்தது. ஆனால் நடிகை நிலாவோ எனக்கு ஸ்கின் அலர்ஜி இருக்கு அதனால தொட்டியில் மினரல் வாட்டரை நிரப்புங்கள் அப்போதுதான் நடிப்பேன் என கறாராக பேசியுள்ளார்.

  ஷூட்டிங் பாதியிலேயே ஓடி விட்டார்

  ஷூட்டிங் பாதியிலேயே ஓடி விட்டார்

  படப்பிடிப்பு நடந்த இடம் கிராமம் அதுமட்டுமில்லாமல் அவ்வளவு மினரல் வாட்டருக்கு பட்ஜெட்டும் இல்லை என்பதால் படக்குழு இருக்கும் தண்ணீரிலேயே நடிக்கச் சொல்லி கேட்டுள்ளனர். அதற்கு சற்றும் தலைசாய்க்காத நிலா யார் பேச்சையும் கேட்காமல் சுவர் ஏறி குதித்து பிளைட் பிடித்து மும்பை சென்றுவிட்டாராம். அதன்பிறகு படக்குழு மும்பை சென்று நிலாவை சமாதானப்படுத்தி வெளிநாட்டில் வைத்து அந்த பாடலை எடுத்து முடித்தார்களாம். இந்த கலவர தகவலை இயக்குனர் தியாகராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

  English summary
  Actress Nila Went Off From Mid of Jambavan Shooting Says Thiagarajan
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X