Just In
- 23 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 56 min ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
- 1 hr ago
மீட் பண்ணலாமா.. வேட்டி சட்டையில்.. எவ்ளோ அழகா இருக்காரு.. வைரலாகும் ஆரி அர்ஜுனன் போட்டோ!
Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- News
மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்!
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இஞ்சியிடுப்பழகா.. மஞ்சசிவப்பழகா.. ரேவதியின் 53வது பிறந்த நாள் இன்று! ஹேப்பி பர்த்டே மேடம்!
சென்னை: மண்வாசனை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ரேவதி இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரேவதி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். 1966 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார்.
ரேவதிக்கு பெற்றோர் வைத்த பெயர் ஆசா கேளுண்ணி குட்டி. தமிழில் பாரதிராஜவின் மண்வாசனை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

புதுமைப்பெண், மவுனராகம்
தொடர்ந்து புதுமைப்பெண். வைதேகி காத்திருந்தாள், ஆகாயத் தாமரைகள், ஆண்பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மவுன ராகம், புன்னகை மன்னன், அரங்கேற்ற வேளை, தேவர்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்
1980களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

தேசிய விருதுகள்
சில படங்களை இயக்கியும் உள்ளார். தேவர் மகன் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதேபோல் அவர் இயக்கிய மித்ர், மை பிரெண்ட் ஆங்கில திரைப்படம் சிறந்த ஆங்கில படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

ரேவதி திருமணம்
இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார் ரேவதி. பின்னர், 2002 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

53வது பிறந்த நாள்
கடந்த ஆண்டு வெளியான பா பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்தார் ரேவதி. தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடிகை ரேவதியின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
|
ரேவதிக்கு வாழ்த்து
70எம்எம் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் எப்போதும் அழகான ரேவதி மேடமுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவிககப்பட்டுள்ளது. மவுனராகம் முதல் பா பாண்டி வரை உண்மையான அழகையும் கருணையையும் வெளிப்படுத்தியவர்! அவரது அடுத்த ஜாக்பாட் திரைப்படத்திற்கு ஆல் தி பெஸ்ட். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ரேவதி மேடம் வாழ்த்துகள்
ஃபைவ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ரேவதி மேடம்.. என தெரிவிக்கப்பட்டுள்ளது.