»   »  போதையில் மயங்கி கிடந்த நடிகை

போதையில் மயங்கி கிடந்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sangeetha
டைரக்டர் செல்வா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் புதுமுக நடிகை சங்கீதா.

சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், விபசாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். இப்போது அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றி வெளியே வந்துவிட்டார்.

இந் நிலையில் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள தமிழ்நாடு தியேட்டர் அருகே நேற்று நள்ளிரவு 2 மணிக்கு போதையில் தள்ளாடியபடி நடந்து வந்தார் சங்கீதா.

லட்சுமிஅம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வந்தவர் மயங்கி விழுந்தார். அப்போது ரோந்து வந்த போலீசார் சங்கீதாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா இன்று அதிகாலை அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் ஓடிவிட்டார்.

இந் நிலையில் சங்கீதா இன்று காலையில் வியாசர்பாடியில் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார். அப்போதும் போதையில் தான் இருந்தார்.

இதையடுத்து போலீசார் வந்து அவரை காவல் நிலையத்துக் கொண்டு சென்றார். பின்னர் அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர் சங்கீதாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil