»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது தெரியுதோ இல்லையோ, எதை செய்தால் மேனியழகைக் காப்பாற்றலாம்என்பது மட்டும் கோலிவுட் ஆட்களுக்கு அத்துப்பிடி.

உடம்பை இளமையுடனும் அழகுடனும் வைத்திருக்க இவர்கள் படும்பாடு இருக்கிறதே அடேங்கப்பா! அதில்ஒன்றுதான் மூலிகை வைத்தியம். பளபளப்பான, மினுமினுப்பான உடல் பெற, சோர்வை நீக்க என சகலசமாச்சாரங்களுக்காகவும் கேரள மூலிகை வைத்தியத்தை நாடுகின்றனர் கோலிவுட்காரர்கள்.

பாபா படத்தில் நடிக்கும்முன்பு தனது முகச்சுருக்கங்களை நீக்கி, தொலைந்து போன இளமையை மீட்டெடுக்க நடிகர்ரஜினி கேரளாவுக்குச் சென்று மூலிகை மசாஜ் செய்து கொண்டார். பிதாமகன் படத்திற்குப் பிறகு விக்ரம்,பிரஷ்னஸ்க்காக கேரளா சென்று வைத்தியம் செய்தார்.

மூலிகை மருத்துவம் ஹீரோக்களை மட்டும் கவரவில்லை. ஹீரோயின்களிலும் அதுபோல சிலர் மூலிகைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

ஸ்னேகா வாரத்திற்கு ஒரு நாள் மூலிகை குளியல் நடத்துகிறார். அத்தோடு மூலிகை மசாஜும் அவ்வப்போதுசெய்து கொள்கிறாராம். இடுப்பைக் எடுப்பாக மாற்றவும் ஸ்பெஷல் மூலிகை வைத்தியம் பார்க்கிறாராம்.

இதேபோல, சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று விவகாரமாக கேட்டு ரசிகர்களை கவர்ந்துஇழுத்த தேஜாஸ்ரீயும் மூலிகை மருந்து சாப்பிடுகிறாராம். உடம்பு இளைக்க இந்த மூலிகை மருந்தாம்.

த்ரிஷாவும் மூலிகைப் பிரியைதான். கேரள கைக்குத்தல் அரிசியை மட்டுமே சாப்பிடும் அவர் ஒட்டகப் பாலையும்அவ்வப்போது வரவழைத்துக் குடிக்கிறாராம். எல்லாம் உடம்பு சிக்கென இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

த்ரிஷா தனது மேனியழகுக்கு முற்றிலும் மூலிகை வைத்தியத்தை நம்பியிருக்கவில்லை. அண்மையில் அம்மணி ஒருரகசிய ஆபரேஷன் செய்து கொண்டாராம். ஆபரேஷன் என்றதும் நீங்கள் நினைப்பது போன்று வில்லங்கசமாச்சாரம் எதுவும் கிடையாது.

இது பாடி ஷேப் சம்பந்தப்பட்ட விஷயம். நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க தனக்கு என்ன குறை என்று யோசித்து,பின்னழகுதான் தனக்கு குறைவாக இருக்கிறது என்று முடிவுக்கு வந்த த்ரிஷா அதை சரிக்கட்ட முடிவு செய்தார்.

ஓசைப்படாமல் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், பின்னழகை சரி செய்ய ஒரு ஆபரேஷன்செய்து கொண்டார். ஆபரேஷன் காரணமாக ரெஸ்ட்டில் இருந்து வரும் த்ரிஷா விரைவில் தனது அழகைரசிகர்களுக்குக் காட்டி குளிர்விக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil