»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழில் முன்னணி நடிகைகளின் இப்போதைய சம்பள நிலவரம்:

சிம்ரன்: இவர் கடைசியாக வாங்கிய சம்பளம் ரூ. 35 லட்சம். சந்திரமுகி படத்துக்கும் அதையே தான் டிமாண்ட் செய்துள்ளார். ஆனால்,திருமணமானதை காரணம் காட்டி ரூ. 25 லட்சம் தருவதாக சொல்லி புக் செய்திருக்கிறார்கள்.

த்ரிஷா: ரூ. 30 லட்சம் கேட்கிறார். கூட போட்டுத் தந்தால், கூடுதல் கவர்ச்சி காட்டுவேன் என்பார். அதற்கேற்ப சில லகரங்களைதயாரிப்பாளர்கள் கூட்டித் தருவது உண்டு. தெலுங்கில் தூக்கலான கவர்ச்சி காட்டித்தான் நடிக்க வேண்டும் என்பதால் ரூ. 40 லட்சம்வசூலிக்கிறார். இப்போதைக்கு தென் இந்தியாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை த்ரிஷா தான்.

ஜோதிகா: ஜோதிகாவின் விலை ரூ. 40 லட்சம் வரை இருந்து இப்போது குறைந்துவிட்டது. இப்போதைய சம்பளம் ரூ. 30 லட்சம்.

ரீமா சென்: மிக வேகமாக த்ரிஷாவின் ரேட்டை தாண்டப் போவது இவர் தான் என்கிறார்கள். லேட்டஸ்ட் ரேட் ரூ. 30 லட்சம். இப்போதுதமிழில் அதிக டிமாண்டில் இருக்கும் ஹீரோயின் இவர் தான். இதனால் ரேட்டை கூடிய விரைவில் 40க்கு கொண்டு போகதிட்டமிட்டுள்ளார்.

ஸ்னேகா: ஸ்னேகாவின் இப்போதைய சம்பளம் ரூ. 12 லட்சம். ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது குறைவே. சினிமாவில் மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு துட்டு தேத்துவதை விட டிவி விளம்பரங்கள் மூலம் ஸ்னேகா அதிக பணம் ஈட்டுகிறார். 3 நாள் விளம்பரசூட்டிங்கிற்கு ரூ. 4 லட்சம் வாங்குகிறார்.

சோனியா அகர்வால்: பாதி தூக்கத்திலேயே வந்து போவார். இவரது இப்போதைய ரேட் ரூ. 10 லட்சம்.

கிரண்: இவர் லேடி மாதவன் மாதிரி. சும்மாவாவது வீட்டில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேனே தவிர, ஒரு கோடிதந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாதவனைப் போல, ரூ. 30 லட்சம் தந்தா தான் வருவேன் என்று பிடிவாதம்பிடித்தவர் கிரண். இதனால் பிழைப்பு நாறிவிடவே இப்போது ரூ. 20 லட்சம், ரூ. 15 லட்சம என இறங்கி வந்து பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.

நந்திதா தாஸ்: அட்டகாச கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க முன் வரும் நந்திதா தாஸ் வாங்குவது ரூ. 35 லட்சம். காசுகொடுத்துவிட்டால் மட்டும் வந்துவிட மாட்டார். கதையில் தனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் பார்த்துவிட்டுத் தான் தலையாட்டுவார்.

நதியா: ரொம்ப நாட்களுக்கு முன் தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட நதியா இப்போது எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்துக்குவாங்கியிருப்பது ரூ. 25 லட்சம். இதைத் தொடர்ந்து அவரை நடிக்க வைக்கச் சென்றவர்களிடம் ரூ. 30 லட்சம் கேட்டிருக்கிறார். அதுக்குசல்லி காசு குறையாதாம்.

ரம்யா: திவ்யாஸ் பந்தனாஸ் என்ற பெயரில் வந்து ரம்யாவான இந்த பெங்களூர் வரவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ. 3 லட்சம்.

இவர்களைத் தவிர மும்பை, பெங்களூர், ஆந்திரா வரவுகள் என வாரத்துக்கு 5 பேர் சினிமாவில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ. 1 முதல் ரூ. 3 லட்சம் மட்டுமே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil