»   »  விளம்பரத்தால் பொருள் விற்காது - ஷாருக் கான்

விளம்பரத்தால் பொருள் விற்காது - ஷாருக் கான்

Subscribe to Oneindia Tamil
Sharukh Khan
மும்பை: பிரபலங்களை வைத்து விளம்பரப் படங்களை எடுப்பதன் மூலம் மட்டும், குறிப்பிட்ட பொருளின் விற்பனை அதிகரித்து விடாது. அந்தப் பொருளுக்கு தரமும் இருக்க வேண்டும் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் முன்னணி ஸ்டார்களில் ஷாருக் முதன்மையானவர். லேட்டஸ்டாக நோக்கியா செல்போனுக்கான பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் ஷாருக்.

மும்பையில் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் பேசுகையில், நான் வந்துதான் நோக்கியாவின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையில் நோக்கியா இல்லை.

ஒரு பொருளின் விற்பனையை நான் அதிகரித்து விட முடியாது. எனது முகம் இருப்பதால் மட்டுமே ஒரு பொருளை மக்கள் வாங்கிப் பயன்படுத்திவிட மாட்டார்கள். தரம் உட்பட மற்ற காரணங்களும் அவசியம் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil