»   »  வெனீஸில் ஐஸ் தேனிலவு

வெனீஸில் ஐஸ் தேனிலவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் வெனீஸ் நகரில் தேனிலைவக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும், மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டில் மிகுந்த கோலாகலமாக 20ம் தேதி திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்த பின்னர் அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா இல்லத்திலேயே தங்கி தங்களது இல்லற வாழ்க்கைகையத் தொடங்கினர் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும்.

இதையடுத்து வருகிற ஜூன் மாதம் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி அமிதாப் பச்சன் குடும்பம் திட்டமிட்டுள்ளது. கல்யாணத்தை முடித்துக் கொண்ட அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும், இன்னும் ஓரிரு நாட்களில் வெனீஸுக்கு தேனிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இன்று காலை திருப்பதிக்கு வந்தனர். அவர்களுடன் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அனில் அம்பானி ஆகியோரும் வந்திருந்தனர்.

திருப்பதிக்கு ஐஸ்வர்யா வருவதை அறிந்த ரசிகர்கள் அவர்களது கார் சென்ற பாதை நெடுகிலும் கூடியிருந்தனர். பின்னர் திருப்பதி கோவிலுக்குச் சென்ற அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் பய பக்தியுடன் வணங்கினர். பின்னர் உண்டியலில் காணிக்கையும் செலுத்தினர்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil