»   »  ஐஸ் கல்யாணம்: மணிரத்னத்துக்கு மட்டும் அழைப்பு

ஐஸ் கல்யாணம்: மணிரத்னத்துக்கு மட்டும் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் நாளை நடைபெறவுள்ள கல்யாணத்துக்கு தமிழகத்திலிருந்து இயக்குநர் மணிரத்னம் மட்டும் அழைக்கப்பட்டுள்ளாராம்.

மிக மிக பரபரப்பாக பேசப்பட்ட ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் கல்யாணத்தை படு கமுக்கமாக நடத்த முடிவு செய்துள்ளார் அமிதாப் பச்சன்.

மும்பையில் உள்ள தனது ஆடம்பர பங்களாவில் மிக மிக முக்கியப் புள்ளிகளை மட்டுமே கூப்பிட்டு கல்யாணத்தை நடத்துகிறார். நேற்று முதல் கல்யாண நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று சங்கீத் என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக மிக குறிப்பிட்ட சிலர் மட்டுமே இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பிதழ் இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பாவப்பட்ட ரசிகர்களும், பொதுமக்களும் அமிதாப் வீடு உள்ள தெருவில் முட்டி மோதி அலை பாய்ந்தனர். அவர்களை போலீஸாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாவலர்களும் விரட்டி அடித்தனர்.

அப்படி இருந்தும் ஐஸ்வர்யாவின் கார் வந்தபோது அவரது முகத்தை தரிசிக்க மக்கள் படாதபாடு பட்டு முண்டியடித்தனர். இசை நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு ஆடிப் பாடினராம்.

அதேபோல அபிஷேக் பச்சன் தனது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ெகாண்டாடி தண்ணீர் பார்ட்டி அமிதாப்பின் இன்னொரு வீடான ஜல்சாவில் நடந்தது.

இதில் திரையுலகில் அபிஷேக்குக்கு மிகவும் நெருங்கிய சிலர் கலந்து ெகாண்டனர். வயசு வித்தியாசம் பாராமல் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங்கும் இதில் கலந்து ெகாண்டு ஆட்டம் போட்டாராம்.

மிக மிக ஆடம்பரமான இந்த பார்ட்டியில் மது வகைகளும், ஜூஸ் வகைகளும் ஆறாக பெருகி ஓடியதாம்.

இன்று 2வது நாள் நிகழ்ச்சியில் மணமகள் ஐஸ்வர்யா ராய்க்கு மருதாணி இடும் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை கல்யாணம் நடைபெறுகிறது.

கல்யாணத்திற்கு தென்னிந்தியத் திரையுலகிலிருந்து இயக்குநர் மணிரத்தினத்தை மட்டுமே அமிதாப் பச்சன் அழைத்துள்ளாராம். அமிதாப்பின் நெருங்கிய நண்பரான ரஜினிக்குக் கூட அழைப்பு இல்ைல என்று கூறப்படுகிறது.

இருவர் படம் மூலம் ஐஸ்வர்யா ராயை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பதும், அபிஷேக் பச்சனுக்கு குரு படம் மூலம் பிரேக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரு படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் அபி, ஐஸ் காதல் வெட்ட வெளிச்சமாகி, கல்யாணம் குறித்த பேச்சுக்களும் வெளிப்படையாக அலசப்பட ஆரம்பித்தன என்பது நினைவிருக்கலாம்.

மதுரைக்கு குரு ஷூட்டிங்குக்காக சென்ற நேரத்தில் அபியும், ஐஸும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரகசியமாக சென்று கல்யாணம் செய்து கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இதையடுத்து அமர்சிங்கை மதுரைக்கு அனுப்பி ஐஸையும், அபியையும் சமாதானப்படுத்தினார் அமிதாப் என்பதும் நினைவிருக்கலாம்.

நெருங்கிய நண்பர் என்பதாலும், அபிஷேக்ககு பிரேக் ெகாடுத்தவர் என்பதாலும் மணியை கல்யாணத்திற்கு அழைத்துள்ளாராம் அமிதாப். மணியும் கல்யாணத்திற்குப் ேபாக தயாராகி வருகிறாராம்.

மணிரத்தினத்தைத்த தவிர வேறு யாருக்கும் அழைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil