»   »  ஜான்சி ராணி ஐஸ்வர்யா

ஜான்சி ராணி ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்யாணமாகி வாழ்க்கையின் முக்கிய கட்டத்துக்குள் நுழைந்துள்ள ஐஸ்வர்யா ராய், கல்யாணத்திற்குப் பின்னர் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது, ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கவுள்ளார்.

முதல் இரு காதலும் தோல்வியில் முடிய, 3வது காதலர் அபிஷேக்குடன் வெற்றிகரமாக மண வாழ்க்கையில் நுழைந்துள்ளார் ஐஸ்வர்யா. தங்கள் வீட்டு மகாராணி தொடர்ந்து சினிமாவில் நடிக்க எந்தத் தடையும் இல்லை என்று பிக் பி குடும்பம் பச்சைக் கொடி காட்டி விட்டதால் ஐஸை விட பாலிவுட்காரர்கள்தான் ரொம்ப சந்தோஷமாக உள்ளனர்.

கல்யாணத்திற்கு முன்பு ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக் கொண்ட படம் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கவுள்ள அக்பர் ஜோதா படம். இதையடுத்து கேத்தன் மேத்தாவின் தயாரிப்பில் ஜான்சி கி ராணி என்ற படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா.

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. இதில் ராணி லட்சுமிபாயாக நடிக்கிறார் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்காக மெனக்கெடவும் ஆரம்பித்துள்ளார்.

ராணி லட்சுமி பாய், சண்டைப் பயிற்சிகளில் சிறந்து விளங்கியவர் என்பதால் கேரக்டரின் தத்ரூபத்திற்காக ஐஸ்வர்யாவும் சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். அதாவது குதிரையேற்றம், வாள் சண்டை என பலவித சண்டைகளிலும் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாராம் ஐஸ்வர்யா.

இந்த ஆண்டு கடைசியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் கேத்தன் மேத்தா.

இந்தியர்களின் ராணியாக கலக்கிய ஐஸ்வர்யா, ஜான்சியின் ராணி லட்சுமி பாய் வேடத்திலும் கலக்குவார் என நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil