»   »  அம்மா ஆகிறார் ஐஸ்வர்யா!

அம்மா ஆகிறார் ஐஸ்வர்யா!

Subscribe to Oneindia Tamil

அமிதாப் பச்சன் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேரவுள்ளார். அவர் வேறு யாருமல்ல, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்குப் பிறக்கப் போகும் குழந்தைதான்.

இந்தியாவின் பேரழியாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய்க்கும், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி கோலாகலமாக கல்யாணம் நடந்தது.

என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு படு கமுக்கமாக தனது வீட்டில் வைத்து அபிஷேக், ஐஸ் கல்யாணத்தை முடித்தார் அமிதாப் பச்சன்.

தற்போது ஐஸ்வர்யா ராய் தாயாகியுள்ளார். கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யாவுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் குழந்தை பிறக்கக் கூடும் என டாக்டர்கள் கூறியுள்ளனராம்.

கல்யாணத்திற்குப் பின் சில காலம் வீட்டோடு இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் வெளியுலகில் தலை காட்டத் தொடங்கியுள்ளனர்.

உறவுக்காரர்களின் வீட்டு விழாக்களில் பங்கேற்கும் அவர் திரைப்பட விழாக்களிலும் கூட பங்கேற்கிறார். படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அவருடன் அபிஷேக்கோ அல்லது அமிதாப்போ உடன் வருகிறார்கள்.

ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரின் முதல் எழுத்து ஏ என்றுதான் ஆரம்பிக்கிறது. எனவே குழந்தைக்கும் அதேபோலத்தான் பெயர் வைப்பீர்களா என்று அபிஷேக்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அபிஷேக் பதிலளிக்கையில், குழந்தைகள் அமைவது என்பது நாமாக திட்டமிட்டு வருவதல்ல, அது கடவுளின் கருணை, தானாக நடப்பது. இப்போதைக்கு குழந்தையின் பெயர் குறித்து யோசிக்கவில்லை. வீட்டில் பெரியவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பெயர் வைக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எனது குழந்தை என்ற செய்தியே எனக்கு சந்தோஷமாக உள்ளது. அந்த சந்தோஷத்தில் மூழ்கியிருப்பதையே இப்போதைக்கு முக்கியமாக நினைக்கிறேன் என்றார் அப்பா அபிஷேக் பச்சன்.

சந்தோஷம்யா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil