»   »  42வது பிறந்தநாளைக் கொண்டாடும் 50 கேஜி தாஜ்மஹால்1

42வது பிறந்தநாளைக் கொண்டாடும் 50 கேஜி தாஜ்மஹால்1

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனின் மனைவியானார்.

ஆரத்யா...

ஆரத்யா...

இந்தத் தம்பதிக்கு தற்போது ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையை வளர்ப்பதற்காக சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா ராய், ஜஸ்பா படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டைத் துவக்கியுள்ளார்.

ஏ தில் ஹேய் முஸ்கில்...

ஏ தில் ஹேய் முஸ்கில்...

தற்போது இவர் கரண் ஜோஹரின் இயக்கத்தில் ஏ தில் ஹேய் முஸ்கில் என்ற படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

42வது பிறந்தநாள்...

42வது பிறந்தநாள்...

இந்நிலையில், இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஐஸ்வர்யா ராய். இதற்காக டைரக்டரிடம் அனுமதி வாங்கி விட்டு, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் பிறந்தநாள் கொண்டாடச் சென்றுள்ளார்.

சர்ப்பிரைஸ் கிப்ட்...

சர்ப்பிரைஸ் கிப்ட்...

ஐஸ்வர்யாவிற்கு சர்ப்பிரைஸ் பரிசு ஒன்றைத் தந்து சந்தோஷத்தில் மூழ்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம் அபிஷேக் பச்சனும் அவரது மகளும்.

ஒரு வேளை விளம்பரத்துல வர்ற மாதிரி குக்கரா இருக்குமோ....??!!!

English summary
Bollywood beauty Aishwarya Rai Bachchan has turned 42 today and the actress will be celebrating this day with her husband Abhishek Bachchan and daughter Aaradhya like always.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil