என்னிடம் நகுல் பேசாததற்கு ஐஸ்வர்யா & சௌந்தர்யா ரஜினிகாந்த் காரணமாக இருக்கலாம்... ராஜகுமாரன் பேச்சு
சென்னை: நடிகை தேவயானி தற்சமயம் புதுப்புது அர்த்தங்கள் என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே வேளையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தனது மைத்துனன் நகுல் தன்னிடம் பேசாதது பற்றி ஒரு பேட்டியில் காரணத்தை கூறியுள்ளார்.

இருவரின் அறிமுகம்
சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்த போது அதில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜகுமாரன் இயக்குநராக அறிமுகமான நீ வருவாய் என படத்திலிருந்து தொடர்ச்சியாக அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இரு வீட்டிலும் எதிர்ப்பு
பின்னர் அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தவுடன் இரண்டு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அதனால் ரகசியமாக கடந்த 2001-ஆம் ஆண்டு திருத்தணியில் திருமணம் முடித்தார்கள். தேவயானி சுவர் ஏரி குறித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக அப்போதைய செய்திகளில் தலைப்பாக வந்தது.

நல்வாழ்க்கை
அதன் பிறகு தேவயானி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இருவரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படங்களை தயாரிக்கவும் செய்தனர். அவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னமும் தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் அவர்களிடம் பேசாமல் இருக்கிறாராம்.

ரஜினி மகள்கள் காரணம்
சமீபத்தில் ராஜகுமாரன் ஒரு பேட்டி கொடுக்கையில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரமம் பள்ளியில் தான் நகுல் படித்ததாகவும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய நண்பர்கள் என்றும் தேவயானி திருமணத்தின் போது அவர்கள் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும். சிறிய பையன் என்பதால் அதனை அவமானமாக எண்ணி இன்னும் என்னிடம் பேசாமல் இருக்கக் கூடும் என்று ராஜகுமாரன் தனது யூகத்தை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தங்களது திருமணத்திற்கு முன்னர் ஒரு முறை தேவையானியின் மூத்த சகோதரனுடன் வாடகைக்கு வீடு பார்க்க சென்றதாகவும் அப்போது தேவையானி திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகையாகவே இருக்கப் போவதாக வீட்டில் கூறி வருவதாக வருத்தமாக கூறினாராம். ராஜகுமாரிடம் யாராவது எதையாவது சொல்லிவிட்டாலோ கேட்டுவிட்டாலோ அதனை வரம் போல கொடுப்பதுதான் அவரது வழக்கமாம். அதனால் தேவயானியின் சகோதரனின் ஆசையை தான் திருமணம் செய்து நிறைவேற்றியதாக அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











