»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜக்குபாய் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடமும், ராணி முகர்ஜியிடமும் பேச்சு நடந்து வருகிறது.

பாபா படத்தைப் போலவே, சூட்டிங் தொடங்கும் முன்பே ஜக்குபாய் படம் பற்றியும் புதுப்புது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.கதை விவாதம் கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் கடந்த 4 நாட்களாக நடைபெறுகிறது

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும் அவருடைய உதவியாளர்களும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜினியும்அவ்வப்போது கலந்து கொள்கிறார். படத்தின் கதை பற்றி ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் ரஜினி, ஜஹாங்கீர் என்ற பெயரில் தீவிரவாதியாக நடிக்கிறார் என்றும் அவரை சாந்தா ஜக்குபாய் என்ற பெண்சாமியார் அறிவுரை கூறி திருத்தி, நல்வழிக்கு மாற்றுவது போலவும் சீரியஸாக கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சீரியஸ் கதையெல்லாம் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்துக் கொண்டு ரஜினி எடுக்க மாட்டார் என்று சொல்லும்கோடம்பாக்கம் குருவிகள் வேறு கதை சொல்கின்றன.

கதை வழக்கமான கே.எஸ்.ரவிக்குமாரின் ஸ்டைலில்தானாம். அப்பா பண்ணையார் ரஜினி, அவர் ரொம்ம்ம்ப நல்லவர்,வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பும் மகன் ரஜினி, ஒரு பங்காளி எதிரி (நம்ம ராமதாஸ் மாதிரி), பக்கத்து ஊரோடு தண்ணீர்பிரச்சனை, அதில் அப்பா ரஜினியை பங்காளி கொல்வது, இதையடுத்து ஊரே சேர்ந்து மகன் ரஜினிக்கு துணை நிற்பது,

கடைசியில் மக்கள் துணையுடன் எதிரியை ஒழித்து அல்லது திருத்தி, பக்கத்துக்கு ஊரில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது,இதையடுத்து மக்களின் தலைவனாக உயர்வது, நாடே போற்ற வாழ்வது, இடையிடையே மகன் ரஜினியின் காதல்.. டான்ஸ் எனகதை போகும் என்கிறார்கள்.

அரசியல் டயலாக்குகள், இதோ வரப் போறேன், இதோ வந்துட்டேன்... என்று ரசிகர்களை மீண்டும் அரசியல்நம்பிக்கைகளுடன் இருக்க வைத்து, எல்லோரையும் மீண்டும் ரஜினி குறித்து ஒரு எதிர்பார்ப்போடு இருக்கச் செய்யும்சமாச்சாரங்களும் அதிக அளவில் சேர்க்கப்படுமாம்.

கதையில் தண்ணீர் பிரச்சனையோடு, சம கால அரசியல், மெல்லிய திராவிட எதிர்ப்பு, தேசியவாதக்குக்கு ஆதரவு என எல்லாசப்ஜெக்ட்களையும் தொடப் போகிறார்களாம்.

கதாநாயகியாக ஜோதிகா அல்லது த்ரிஷா நடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. சிம்பு, சூர்யா என்று இளைய தலைமுறைநடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் இவர்களை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தால் மக்கள் ஒத்துக் கொள்வார்களா என்றுரஜினி யோசிப்பதாகத் தெரிகிறது.

ரஜினிக்கு ஜோடி என்றால் கொஞ்சம் வயதான, அதே நேரத்தில் தமிழக மக்களுக்கு அறிமுகமான நடிகை வேண்டும். இதற்குமுன்பே செளந்தர்யா, மனிஷா கொய்ராலா ஆகியோர் அப்படித்தான தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அந்தரீதியில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என்ற யோசனை எழுந்துள்ளது. ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தைநடக்கிறது.

அதே நேரத்தில் ஹே ராம் படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமாகியிருக்கும் ராணி முகர்ஜியின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு,அவரிடமும் பேசி வருகிறார்கள்.

இந்தியில் நம்பர் ஒன்னாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிக்குஜோடியாக நடித்தால், பின்னால் தமிழ்-தெலுங்கில் இளம் நடிகர்களுடன் நடிப்பது நெருடலாக இருக்கும் என்பதால் அவர்சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தானாம்.

(படம் தயாராகி, ரிலீசாவதற்குள் நம் ஆட்கள் எப்படியும் 50, 60 ஜக்குபாய் கதைகளை தயார் செய்துவிடுவார்கள்)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil