»   »  அசத்தல் அஜந்தா

அசத்தல் அஜந்தா

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவாகியுள்ள அஜந்தா படத்தின் பாடல் கேசட் வெளியீடு மதுரையில் வருகிற 27ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம் அஜந்தா. படத்தின் நாயகியின் பெயரும் அஜந்தாதான். படு அழகாக, அப்சரஸ் போல அமெரிக்கையாக இருக்கிறார் அஜந்தார். கூட ஜோடி போட்டிருப்பவர் ரமணா.

படத்தின் சிறப்பம்சமே இளையராஜதான். இப்படத்துக்காக 36 பாடல்களைப் போட்டுக் கொடுத்தாராம் ராஜா. இதைப் பார்த்து அசந்து போய் விட்டாராம் தயாரிப்பாளர் ரவிசங்கர். கதாக. திருமாவளவன்தான் படத்தின் இயக்குநர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டை மதுரையில் வருகிற 27ம் தேதி விமரிசையாக கொண்டாடவுள்ளனர். மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவின்போது சி.டியை இளையராஜா வெளியிட பாரதி ராஜா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

இதே நிகழ்ச்சியில் இளையராஜா இலக்கியப் பேரவை தொடக்க விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வண்ணதாசன், நமச்சிவாயம் ஆகிய தமிழறிஞர்களுக்கு ரூ.2.50 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

ஜெயகாந்தன், வாலி, மு.மேத்தா, பா.விஜய், நா.முத்துக்குமார், ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்கின்றனர். இறுதியாக ராஜாவின் இன்னிசைக் கச்சேரியம் இடம் பெறுகிறது.

Please Wait while comments are loading...