»   »  சித்தன்ஜி அஜய்

சித்தன்ஜி அஜய்

Subscribe to Oneindia Tamil

பிதாமகன் இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி விட்டது. கலைஞர்களையும் இறுதி செய்து விட்டனராம்.

அந்தக் காலத்தில் இந்தியில் ஹிட் ஆன படங்கள் அப்படியே சுடச் சுட தமிழிலும் ரீமேக் ஆகும். அப்படி தமிழுக்கு வந்த இந்திப் படங்கள் நிறைய குறிப்பாக ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் பல இந்தியில் வந்தவைதான்.

இந்த டிரண்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்கள் இந்திக்கு ரீமேக் ஆகி வருகிறது.

சமீபத்தில் கஜினியின் இந்தி ரீமேக் தொடங்கியது. அமீர்கான், ஆசின் நடிப்பில், இந்தி கஜினி உருவாகிறது. அதேபோல போக்கிரி படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த நிலையில் பாலாவின் பயங்கர இயக்கத்தில், விக்ரமின் வெளிற வைத்த நடிப்பில், சூர்யாவின் சூப்பர் அலப்பறையில், லைலாவின் ரகளையில் விக்ரமுக்கு விருதையும் கூடவே வாங்கிக் கொடுத்து அசத்திய பிதாமகன், இந்தியில் ரீமேக் ஆகிறது.

விக்ரம் நடித்த சுடுகாட்டு சித்தன் கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். சூர்யா கேரக்டரில் அபிஷேக் பச்சன் நடிக்கவிருக்கிறார். லைலா கேரக்டரில் ரகளை செய்யப் போவது யார் என்று தெரியவில்லை.

படத்தை ஒளிப்பதிவாளர் திரு இயக்கவுள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சித்தனை மிஞ்சுவாரா இந்தி சித்தன்ஜி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil