»   »  தள்ளித் தள்ளிப் போகும் கிரீடம்

தள்ளித் தள்ளிப் போகும் கிரீடம்

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்துள்ள கிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப் போயுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஹிட் படம்தான் கிரீடம். மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படம் அங்கு பெரும் ஹிட் ஆனது. இதையடுத்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி முடிவு செய்தார்.

அஜீத்தை நாயனாகப் போட்டு தமிழில் கிரீடத்தைத் தொடங்கினர். அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். படம் முடிந்து மே 1ம் தேதி அஜீத் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டது.

ஆனால் மே 17ம் தேதி சிவாஜி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால், ரஜினியுடன் மோத வேண்டாம் என நினைத்த அஜீத், கிரீடத்தைத் தள்ளிப்போடும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கிரீடம் தள்ளிப் போனது.

ஜூன் 22ம் தேதி கிரீடம் வெளியாகும் என சுரேஷ் பாலாஜி அறிவித்தர். ஆனால் இப்போது சிவாஜி மேலும் தள்ளிப் போய் ஜூன் 15ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளால் கிரீடம் தரப்பு குழம்பிப் போயுள்ளது.

தயங்காமல் படத்தைத் தள்ளிப் போட்டு விடுங்கள் என அஜீத் கேட்டுக் கொண்டதால் ஜூலை மாதத்திற்குப் படத்தை ஒத்தி வைத்து விட்டனராம்.

இதுகுறித்து கிரீடம் படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஆட்லேப்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில், ஜூலை முதல் வாரம் கிரீடம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார். படத்திற்கு வெயில் புகழ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பில்லா அஜீத்துக்கு கிரீடம் மகுடம் சூட்டுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil