»   »  மீண்டும் அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்!

மீண்டும் அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்!

Subscribe to Oneindia Tamil

அஜீத், திரிஷா நடித்த கிரீடம் படம் தொடர்பான கட் அவுட், பேனர் வைப்பது தொடர்பாக இன்று இருவரது ரசிகர்களும் மோதிக் கொண்டனர். இதனால் தியேட்டர்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அஜீத், திரிஷா நடித்துள்ள கிரீடம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையடுத்து சென்னை நகரில் அப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருவரது ரசிகர்களும் கட் அவுட், பேனர் வைப்பதில் ஈடுபட்டனர்.

நேற்று திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர், அசோக் நகர் காசி தியேட்டர் ஆகியவற்றில் இருவரது ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை சத்யம் தியேட்டர் வளாகத்தில் இருவரது ரசிகர்களும் அடித்துக் கொண்டனர்.

திரிஷா ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்களை அஜீத் ரசிகர்கள் கிழித்து எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த திரிஷா ரசிகர்கள் அஜீத் ரசிகர்களின் கட் அவுட்டை கிழிக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜீத் ரசிகர்கள், திரிஷாவின் கட் அவுட்டை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

ரசிகர்களின் மோதலைத் தொடர்ந்து கிரீடம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil