»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போகும் அடுத்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா, நிச்சயம் ரஜினி இல்லை. அஜீத் ஹீரோவாகநடிக்கப் போகும் அந்தப் படத்திற்குப் பெயர் வில்லன். இது எப்படி இருக்கு?


தினா இசையில் கிங் படத்தில் சில பாப் பாடல்கள் வருகின்றன. இந்தப் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாப்ஸ்டைல் பாடல்களை வைரத்து எழுதுவது இதுவே முதல் முறையாம்.


தயாரிப்பாளர் அசோக் சாம்ராஜுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்த மந்த்ரா இப்போது அவரை விட்டுமுழுவதுமாகப் பிரிந்து வந்துவிட்டார். மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பி வந்து கடை விரித்துப் பார்த்தார். ஒரு பாட்டுக்குடான்ஸ், பிட் ரோல்கள் தான் கிடைக்கின்றன. ஆனாலும் எதையும் விடுவதில்லை. எல்லோரிடமும் அட்வான்ஸ்வாங்கிவிடுகிறார்.


இன்னொரு வைரமுத்து செய்தி. வைரத்துவின் மகன் கபிலனும் சினிமாவுக்குப் பாடல் எழுத வருகிறார். இசை யார் தெரியுமா? யுவன் ஷங்கர் ராஜாவாம். இசை ஞானியின் மகனும் கவிப்பேரரசின் மகனும் இணையப்போகும் தூரத்தில் இல்லை என்கிறார்கள் கோலிவுட்டில். "பெரிசுகளும்" இணையலாமே.


நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார். பதிலாக டிவிதொடர்களில் நடிக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil