»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்டிசனுடன் சேர்ந்து ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அடங்காத் தமிழன்கமலின் ஆளவந்தான் கொஞ்சம் பின்வாங்கியுள்ளது.

எப்படியும் விரைவிலேயே இந்தப் படமும் ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இளம் ஹீரோக்கள் சிறப்பாக நடித்தால் அவர்களை கமல் பாராட்டத் தவறுவதேயில்லை. குறிப்பாக அஜித் மீதுஅலாதி பிரியம் வைத்துள்ளார் கமல். கமல் அட்வைஸ் செய்யும் ஒரே நடிகர் அஜித்தான். உடம்பை கச்சிதமாகவைத்துக் கொள் என்பதில் ஆரம்பித்து இப்படி நடி... அப்படி நடி என்பது வரை அஜித்துகக்கு பல டிப்ஸ்களை தந்துவருகிறார்.

அஜித்தும் கமலை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து மதித்து வருகிறார்.

இப்போது குருவின் படத்துடன் மோதப்போகிறது சிஷ்யனின் படம்.

கமலுக்கு மருதநாயகம் எப்படியோ, அதுபோலவே, அஜித்திற்கும் லட்சியப் படமாக அமைந்துள்ளது சிட்டிசன்.அஜித்திற்கு சிட்டிசன் 30-வது படம்.

1993-ல் அமராவதியில் அறிமுகம் ஆன அஜித், குறுகிய காலத்தில் (இடையில் கொஞ்ச காலம் கோடம்பாக்கம்அவரைப் போட்டுப் பார்த்தது வேறு விஷயம்), தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுவரை 12 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அஜித். சிட்டிசன் படத்தின் இயக்குனர் ஷரவண சுப்பையா கூட புதியவர் தான். சிட்டிசன் படம் 4 மணி நேரத்திற்குவருகிறதாம். பல காட்சிகளை வெட்டி, கூட்டிக் குறைத்தும் கூட படம் 3 மணி நேரத்திற்கு வருகிறதாம். படம் விறுவிறுப்பாக வந்திருக்கிறதாம்.

சிட்டிசன் படத்திற்கு தேவா சிறப்பாக ரெக்கார்டிங் செய்துள்ளாராம். திரும்ப இன்னொருபடத்திற்கு இதுபோல செய்ய முடியாது என்று அஜித் பாராட்டியுள்ளாராம்.

இந்தப் படத்திற்கு மிகவும் சிரத்தையெடுத்து நடித்துள்ளார் அஜித். கமலின் ஆலோசனையின்பேரில், மும்பையிலிருந்து மேக்கப் மேனை வரவழைத்து அசத்தலான 9 கேரக்டர்களில் அசத்தியிருக்கிறார். மேக்கப்மேன் குறித்து யாரைப் பார்த்தாலும் புகழ்ந்து தள்ளுகிறார்.

வயதான வேடத்தில் இவர் ஸ்பாட்டிற்கு வந்தபோது, அஜித்தின் அப்பாவே அசந்து விட்டாராம். அவரைஅடையாளம் காண முடியவில்லையாம். அருகில் சென்று பேசிப் புரிய வைத்த பிறகே, அடடா, இது நம்ம மகனாஎன்று வாய் பிளந்தாராம் சீனியர் அஜித்.

சிட்டிசனுக்கு போட்டியாக இருக்கப் போவது ஆளவந்தான் தான். ரேஸில் யார் முந்தப் போகிறார்கள் என கமல்,அஜித்தைவிட அவர்கள் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil