»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் காட்ஃபாதர் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

ஜக்குபாய் படத்தை அம்போவென்று விட்டுவிட்டு ரஜினி சந்திரமுகி படத்தில் இறங்கியதால், ஜக்குபாய் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அப்செட்ஆகி இருந்தார். ஆனால் துவண்டுபோகாமல் அஜீத்தை வைத்து அமர்க்களமாக ஒரு படத்தை தர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அஜீத்திடம் கதை சொன்னார். கதை மிகவும் பிடித்துப் போனதால் அஜீத்தும் உடனே டேட்ஸ் கொடுத்துவிட்டார். அதற்கடுத்து மளமளவென்று வேலைகளைஆரம்பித்த கே.எஸ்.ரவிக்குமார் தொழில் நுட்பக் கலைஞர்களை ஒவ்வொருவராக பார்த்துப் பார்த்து தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

எதிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. சந்திரமுகி படத்தை விட ஒரு ஹிட் படம் தர வேண்டும் என்ற வெறி அவருக்கு.

தமிழ் சினிமா ஒளிப்பதிவு துறைக்கு இந்திய அளவில் மரியாதை தேடித் தந்த பி.சி.ஸ்ரீராமை ஒளிப்பதிவுக்கு புக் செய்தார்.

தனது ஆர்ப்பரிக்கும் இசையால் இந்திய எல்லைகளைத் தாண்டி உலக இசை ரசிகர்களை வசியம் செய்து வைத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான்தான் படத்திற்கு இசை.

ரஹ்மானுடன் இணைந்து இலக்கியத் தரமான பாடல்கள் பலவற்றைத் தந்திருக்கும் வைரமுத்துதான் இந்தப் படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.


கலைக்கு தோட்டாதரணி, சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன், நடனத்திற்கு சுந்தரம், படத் தொகுப்புக்கு கே.தணிகாச்சலம் என அவரவர் துறைகளில்முத்திரை பதித்த கலைஞர்களை இந்தப் படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார்.

படத்திற்கு காட்ஃபாதர் என்று பெயரிட்டுள்ளார்கள்.

சரண்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணியில் பூஜாவுடன் அஜீத் நடித்த அட்டகாசம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருக்கிறது. காதல், மன்னன், அமர்க்களம்படத்திற்குப் பிறகு சரணுடன் இணைந்து செய்த படம் என்பதால், படத்தின் ரிசல்ட்டை ஒரு பள்ளிக்கூட மாணவன் போல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்அஜீத்.

ஆனாலும் ஹாயாக வீட்டில் ரெஸ்ட் எடுக்க விரும்பவில்லை. உடனடியாக காட்ஃபாதர் சூட்டிங்கில் இறங்கி விட்டார்.

படத்திற்கு பூஜை போட்ட கையோடு இன்றே படப்பிடிப்பையும் துவங்குகிறார்கள். அட்டகாசம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த அஜீத், இந்தப்படத்தில் முதன்முறையாக 3 வேடங்களில் நடிக்கிறார்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிரட்டல் படத்தை அஜீத் டிராப் செய்தார் என்று பேசப்பட்டது. அதனால் இந்தப்படத்தை தயாரிக்கப் போவது அநேகமாக தீனா படத் தயாரிப்பாளர் கார்த்திகேயன் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சக்ரவர்த்திதான் இப்போது படத்தை தயாரிக்கிறார் என்பது பட விளம்பரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

காட்ஃபாதர் என்ற படம்தான் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவிற்கு அவரது சினிமா வாழ்வில் சிகரமாக அமைந்தது. அதேபோல்அஜீத்திற்கும் இந்தப் படம் ஒரு சிகரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil