»   »  அசத்தும் அக்சரா ஹாசன்!

அசத்தும் அக்சரா ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கலைஞானி கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன், இசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அவரது இளைய மகள் அக்சரா ஹாசன் டான்ஸில் அசத்தி வருகிறார்.

Click here for more images

கமல்ஹாசனின் இரு மகள்களும் இரு வேறு திறமைகளுடன் தந்தைக்குப் பெருமை சேர்க்க ஆரம்பித்துள்ளனர். முதல்வர் மகள் ஸ்ருதிக்கு இசையின் மீது தீராத ஆசை. அதில் கற்றுத் தேர்ந்துள்ள அவர் தனி ஆல்பங்களை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அதேபோல நடிப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இளைய மகள் அக்சரா பால்ரூம் டான்ஸில் பிரமிக்க வைக்க ஆரம்பித்திருக்கிறார்.

மகள்களின் விருப்பத்திற்கு கமல் குறுக்கே நிற்பதில்லை. அதன்படி ஸ்ருதி விரும்பியபடி இசைத்துறையில் அவர் பரிமளிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் கமல். அதேபோல தனது இளைய மகள் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொள்ள விரும்பியபோது அதற்கும் உதவினார்.

சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். 16 வயதே ஆகும் அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சையில் தேறியுள்ளாராம்.

பால்ரூம் போட்டி 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ஒரு போட்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதுதான் தற்போது அக்சராவின் லட்சியமாகும்.

ஹாட் ஷூ டான்ஸ் கம்பெயினியின் இயக்குநர் ஜெப்ரி வெர்டுன் அக்சரா குறித்துக் கூறுகையில், அப்படியே கமல்ஹாசனின் சாயல் அக்சராவிடம் உள்ளது. கமலே ஒரு பெரிய டான்ஸர். அவரது திறமை அக்சராவிடமும் உள்ளது. இயற்கையாகவே அவருக்கு டான்ஸ் நன்றாக வருகிறது என்றார்.

ஒலிம்பிக் பால்ரூம் டான்ஸ் போட்டியில் பங்கேற்க தற்போது பாஸ் செய்துள்ளது போல மேலும் 4 பரீட்சையில் அக்சரா தேர்வு பெற வேண்டும். அதற்கான தீவிர முயற்சிகளில் அக்சரா தற்போது மும்முரமாக இறங்கியுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil