»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆன படத்துக்கு வெறும் 6 ரசிகர்களே படம் பார்க்கவந்ததால், அந்த காட்சியை தியேட்டர் உரிமையாளர் ரத்து செய்தார்.

பொங்கல் பண்டிகைக்காக தமிழில் ஏழு புதிய படங்கள் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த புதியபடங்களில் ஒன்று அல்லி அர்ஜூனா. இந்த திரைப்படம் தேனியில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது.

இந்த படத்தில் பிரபல டைரக்டர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமர்க்களம்,பார்த்தேன் ரசித்தேன் படத்தை இயக்கிய டைரக்டர் சரண் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர் வாசலில் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள் என்று அதன்உரிமையாளர் அமர்க்களப்படுத்தியிருந்தார். மேலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களை வரவழைக்கஆட்டோவிலும், கேபிள் டிவி மூலமும் விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனாலும் இரண்டாம் நாள் காலைக் காட்சிக்கு வெறும் 6 ரசிகர்களே வந்ததால், அந்த தியேட்டர் உரிமையாளர்மனம் நொந்து போய் காட்சியை ரத்து செய்தார். ஒரு புதிய ரிலீஸ் படம் இரண்டாவது நாளே கூட்டம் வராததால்காட்சியை ரத்து செய்யப்படுவது சமீப காலத்தில் இது தான் முதல் முறை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil