»   »  அமீர்-பாலா ஹேண்ட் ஷேக்!

அமீர்-பாலா ஹேண்ட் ஷேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை மண் கொடுத்த மக்கா பாலாவும், அமீரும் தங்களுக்குள் நிலவிய பூசல்களை மறந்து விட்டு கை கோர்த்து மீண்டும் நட்பாகியுள்ளனர்.

கோலிவுட்டையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலும், தண்ணீரும் மாதிரி இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் பாலாவும்,அமீரும்.

எப்படி பாரதிராஜாவும், இளையராஜாவும் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து நட்பு பாராட்டி வருகிறார்களோ,அதேபோலத்தான் பாலாவும்,அமீரும் சிறு வயது முதல் தோழர்கள். பள்ளிப் படிப்பிலிருந்தே பின்னி் பிணைந்து திரிந்த இருவரும் தொழிலிலும் சேர்ந்தே ஜொலிக்கத் தொடங்கினர்.

சேது, நந்தா ஆகிய இரு படங்களிலும் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். ஆனால் அதன் பின்னர் நட்பில் விரிசல் விழுந்தது. கருத்து வேறுபாடுகள் கரைபுரண்டோட, இருவரும் பிரிந்தனர். இருவரும் தனித் தனியாக நடை போட ஆரம்பித்தனர்.

பாலா ஒரு பக்கம் பிதாமகன் என்ற பிரமாண்டப் படத்தைக் கொடுக்க, அமீரோ மறுபக்கம் மெளனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் தனது திறமையை பளிச்சிடச் செய்தார்.

இடையில் இவர்களை ஆட்சி செய்த ஈகோ இப்போது போய் விட்டதாம். கசப்புகள் மறைந்து போய், பழைய நட்பு கண் சிமிட்டியபடி புன்சிரி்ப்புடன் இருவருக்குள்ளும் குடி புகுந்துளளதாம்.

சில நாட்களுக்கு முன்பு பாலாவும், அமீரும் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனராம். இதி்ல நல்ல விஷயம்,அதாவது சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், என்னவென்றால், இருவரும் இணைந்து படங்கள் தயாரிக்கப் போகிறார்களாம்.

இதற்காக புதிதாக ஒரு நிறுவனத்தையும் தொடங்கப் போகிறார்களாம். இந்த நிறுவனம் மூலம், திறமைகளுடன் திரியும் இளம் இயக்குநர்களை ஊக்கப்படுத்தி வாய்ப்பளித்து வளர வைக்கப் போகிறார்களாம். இருவரும் தனித் தனியாக புதிய பேனரில் படமும் இயக்குவார்களாம்.

இருவரும் இணைந்திருந்தபோது கொடுத்த சேதுவும், நந்தாவும் அதில் நடித்த விக்ரமுக்கும், சூர்யாவுக்கும் பெரும் பிரேக்காக அமைந்தது. அத்தோடு சினிமா ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாகவும் இருந்தது.

இபபோது மறுபடியும் இருவரு்ம் இணைந்திருப்பது இன்னும் பல அரும் விருந்துகளுக்கு அச்சாரம் போடுவது போல அமைந்துள்ளது.

மொத்தத்தில் தமி்ழ் சினிமாவுக்கு இது நல்ல விஷயம்.

அடிச்சுத் தூள் கிளப்புங்க பங்காளிகளா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil