twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரான்ஸ் பட விழாவில் அமீரின் 'ராம்' சேரனின் 'பொக்கிஷம்', வசந்த பாலனின் 'வெயில்'!

    By Shankar
    |

    Pokkisham Movie
    பிரான்ஸில் முதல் முறையாக தமிழ் திரைப்படங்களுக்காக விழா எடுக்கப்படுகிறது. இதில் அமீரின் ராம் திரைப்படம் 4 தினங்கள் திரையிடப்படுகின்றன. சேரனின் பொக்கிஷம், வசந்த பாலனின் ராம் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

    2005-ம் ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் குவித்த படம் ராம். சரண்யா, ஜீவா, கஜாலா, கஞ்சா கருப்பு நடித்த இந்தப் படம் வெளியானதிலிருந்து உலகமெங்கும் பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது.

    2006-ல் சைப்ரஸில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான (யுவன்) விருதுகளை இந்தப் படம் வென்றது. இதே ஆண்டில் கோவாவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிலும் பங்கேற்று இரு விருதுகளை வென்றது.

    இப்போது பிரான்ஸில் நடக்கும் தமிழ்ப் பட விழாவில் திரையிடப்படுகிறது.

    பிரான்ஸின் நான்கு முக்கிய நகரங்களில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. லெ மீ சுர் சீன், பாரிஸ், மியர் பாய்ஸ்க் என் ஏரேஜ், லக்சம்பர்க் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 1 முதல் 6-ம் தேதி வரை இந்தப் படம் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு நகரிலும் திரையிடல் முடிந்த பிறகு, படம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன.

    இந்தப் படத்துக்குப் பிறகு, செப்டம்பரில் சேரனின் பொக்கிஷம் மற்றும் டிசம்பரில் வசந்த பாலனின் வெயில் ஆகிய படங்கள் பிரான்ஸ் முழுவதும் திரையிடப்படுகின்றன.

    இந்தப் படங்கள் மூன்றையுமே நல்ல பிரெஞ்ச் சப் டைட்டில்களுடன் திரையிடுகிறார்கள். லக்சம்பர்க்கில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

    English summary
    Ameer's Raam, Cheran's Pokkisham and Vasantha Balan's Veyyil are selected to screen in the French Tamil Film Festival will be held in April, September and December.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X