»   »  ஐஸ்-அபிஷேக் திருமணம்: வீட்டின் மீதுவிமானம் பறக்க தடை கோரும் அமிதாப்

ஐஸ்-அபிஷேக் திருமணம்: வீட்டின் மீதுவிமானம் பறக்க தடை கோரும் அமிதாப்

Subscribe to Oneindia Tamil

அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது என் வீட்டின் மீது எந்த விமானமும் பறக்க கூடாது என அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பையில் தன் வீட்டில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்தை நடத்தவுள்ளார் அமிதாப்பச்சன். இந்த திருமண நிகழச்சிகள் வரும் 18ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன.

இதில் முக்கியமான உறவினர்கள், நண்பர்கள் உள்பட 100 பேர் மட்டும் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

அரசியல்வாதிகள் கலந்து கொண்டால் பாதுகாப்பு பிரச்சனை அதிகரிக்கும் என்பதால் அவர்களை அழைக்கவில்லை. ஆனாலும் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் மற்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளரும அரசியல் புரோக்கருமான அமர் சிங்கும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் உள்ளார்.

திரை நட்சத்திரங்களுக்க அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அதே நேரத்தில் தான் சினிமாவில் அறிமுகமான நேரத்தில் உதவிய நண்பர்களை அழைத்துள்ளார் அமிதாப்.

பாதுகாப்பு கருதி திருமணத்தன்று தன் வீட்டின் மீது எந்த விமானங்களும் பறக்க அனுமதிக்க கூடாது என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்திடம் அமிதாப் பச்சன் கேட்டுகொண்டுள்ளார்.

இது எப்டி இருக்கு...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil