»   »  ரஜினியுடன் சிவாஜி பார்த்த அமிதாப்

ரஜினியுடன் சிவாஜி பார்த்த அமிதாப்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அவர் நடித்த சிவாஜி படத்தைப் பார்த்துள்ளார் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.

சமீபத்தில்தான் ரஜினிகாந்த்தை சரமாரியாக புகழ்ந்து தள்ளிப் பேட்டி அளித்திருந்தார் அமிதாப் பச்சன். தனியார் டிவி ஒன்றுக்கு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில், ரஜினிதான் இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி. நான் வெறும் ராஜாதான். ரஜினியுடன் நான் உள்பட யாரையும் ஒப்பிட முடியாது.

ரஜினியின் எளிமை, தனது குழந்தைகளை வளர்த்துள்ள விதம், சினிமாவில் அவர் செய்துள்ள சாதனைகள், பெற்றுள்ள ரசிகர் கூட்டம், இன்று யாருக்குமே கிடையாது என்று கூறியிருந்தார் அமிதாப் பச்சன்.

இந்த பின்னணியில் அமிதாப் பச்சனுக்காக சிவாஜி படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் செவ்வாய்க்கிழமை இரவு அமிதாப்புக்காக பிரத்யேகமாக சிவாஜி திரையிடப்பட்டது. இதற்காக அன்று பிற்பகலே சென்னையிலிருந்து மும்பைக்குப் பறந்துள்ளார் ரஜினி.

படம் பார்த்தபோது ஹம் இந்திப் படத்தில் இருவரும் இணைந்து நடித்த காலத்தை நினைவு கூர்ந்து இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்களாம். ஹம் படத்தில் அமிதாப்பின் தம்பியாக நடித்திருந்தார் ரஜினி.

சிவாஜியைப் பார்த்து மிரண்டு போயுள்ள சில இந்தி பட விநியோகஸ்தர்கள், ரஜினியின் முந்தைய மெகா ஹிட் படங்களான முத்து, படையப்பா ஆகியவற்றை இந்தியில் டப் செய்து வெளியிட ஆர்வமாக உள்ளனராம்.

வட இந்தியாவிலும் சிவாஜி ஆட்டிப் படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் பாலிவுட் நண்பர்களான டேவிட் தவான், டி. ராமாராவின் மகன் அஜய்குமார் ஆகியோர் இந்தியில் ரஜினி நடிக்க வேண்டும் என்று கேட்டு அவரை அணுகியுள்ளனராம். ஆனால் வழக்கம் போல சின்னப் புன்னகையை மட்டும் சிந்தி விட்டு சைலண்ட் ஆகி விட்டாராம் சூப்பர் ஸ்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil