»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகை அனாமிகா தன்னைக் கொடுமைப்படுத்தியதாக புஷ்பலதா என்ற வேலைக்காரச் சிறுமி (10) புகார் கொடுத்துள்ளார்.

அனாமிகா ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர். தற்போது கிரிவலம், பதவிபடுத்தும் பாடு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவரது வீடு சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் உள்ளது. அங்கு புஷ்பலதா என்ற அனாதைச் சிறுமி வேலை பார்த்து

விருந்தினர்களை உபசரிப்பது, சூட்டிங்கில் அனாமிகாவிற்கு உதவியாக இருப்பது ஆகிய வேலைகளை புஷ்பலதா செய்து வந்தாள். இந் நிலையில் ஆட்டுக்கறி வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்ற புஷ்பலதா வீடு திரும்பவில்லை.

வடபழனியில் சுற்றிக் கொண்டிருந்த புஷ்பலதாவை போலீஸார் பிடித்து வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவளை போலீஸார் விசாரித்தபோது அனாமிகா மீது பல குற்றச் சாட்டுக்களை கூறினாள்.

அவள் கூறியதாவது:

கடந்த மூன்றரை வருடமாக அனாமிகா வீட்டில் வேலை பார்த்து வருகிறேன். தொடக்கத்தில் என்னிடம் அன்பாக இருந்த அனாமிகா, பின்பு என்னை சித்ரவதை செய்யத் தொடங்கினார். பல முறை அடித்திருக்கிறார்.

சில நேரம் சாப்பாடு போடாமல் பட்டினி போடுவார். வெளியாட்களிடம் பேசவும் அனுமதிக்க மாட்டார். இதனால் வீட்டை விட்டு தப்பிக்க முடிவு செய்தேன். ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. தப்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.

புஷ்பலதா தற்போது அமைந்தகரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் புஷ்பலதாவைக் காணவில்லை என்று அனாமிகா தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது. புஷ்பலதா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அனாமிகா கூறியதாவது:

அவளை என் அண்ணன்தான் அழைத்து வந்தார். எங்கள் வீட்டுப் பெண் போலத்தான் கவனித்துக் கொண்டோம். அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும்.

முதலில் தான் ஒரு அநாதை என்று எங்களிடம் பொய் சொன்னாள். ஆனால் ஆந்திரா சென்று அவளது அம்மா, அப்பாவை நாங்கள் அழைத்து வந்தோம். ஆனால் அவர்களுடன் போக மறுத்துவிட்டாள்.

யாரோ சிலர் அவளை எனது வீட்டிலிருந்து அழைத்துப் போய் போலீஸில் புகார் கொடுக்க வைத்துள்ளனர் எனறு கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil